Home
News

நார்மல் ரீசார்ஜ்-க்கு டாட்டா.. ஹோம் பிளானில் 3300GB டேட்டா.. ரூ.100 கம்மி விலையில் அம்பானி அடிச்ச செஞ்சுரி!

வழக்கமான ப்ரீபெயிட் ரீசார்ஜ் பிளான்களில் (Normal Prepaid Recharge Plans) விடுபட்டு போஸ்ட்பெயிட் சேவைக்குள் (Postpaid Service) செல்ல விரும்பும் பயனர்களுக்காகவே, இந்தியாவின் 2 டெலிகாம் ஜாம்பவான்கள் ஆன ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய நிறுவனங்கள் ஆனது மிகவும் மலிவான விலைக்கு ஹோம் பிளான்களை வழங்கி வருகின்றன.

இந்திய தேசத்தில் எந்த பகுதியிலும் இருந்தாலும், நீங்கள் ஒரு பெஸ்ட் ஹோம் பிராட்பேண்ட் (Best Home Broadband) இணைப்பை பெற விரும்பினால், ஜியோ அல்லது ஏர்டெல் (Jio VS Airtel) ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால் இவ்விரு நிறுவனங்களின் சேவைகள் தான் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்கிற்கும் சென்றடைந்துள்ளன.

நார்மல் ரீசார்ஜ்-க்கு டாட்டா.. ஹோம் பிளானில் 3300GB டேட்டா!

ஃபைபர் (Fiber) இணைப்புகள் மட்டுமல்லாமல், ஏர்ஃபைபர் (AirFiber) இணைப்புகள் மூலமாகவும் கூட இவ்விரு நிறுவனங்களுமே வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வழங்குகின்றன. அப்படியாக இன்று, இந்த இரண்டு நிறுவனங்களும் தங்கள் ஹோம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மிக குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்களை பற்றித்தான் நாம் இங்கே பார்க உள்ளோம்

ரூ.100 கேப்புல அம்பானி அடிச்ச செஞ்சுரி: முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ தனது பேஸிக் ஹோம் பிளானை மாதத்திற்கு ரூ. 399-க்கு வழங்குகிறது. மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனம் அதையே மாதத்திற்கு ரூ.499-க்கு வழங்குகிறது. அதாவது ஆரம்பத்திலேயே, ஜியோ நிறுவனம் ரூ.100 வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு திட்டங்களும் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளன; இவை அதிவேக மற்றும் நம்பகமான இண்டர்நெட் கனெக்ஷன் மூலம் லட்சக்கணக்கான வீடுகளுக்கு சேவையளித்து வருகின்றன.

பார்தி ஏர்டெல் ரூ.499 ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் (Bharti Airtel Rs.499 Home Broadband Plan Benefits): முன்னரே குறிப்பிட்டபடி பார்தி ஏர்டெல் தனது ரூ.499 ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தை நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் (telecom circles) வழங்குகிறது.

ஏர்டெல்லின் ரூ.499 திட்டம், ஃபைபர் இணைப்புடன் 40 எம்பிபிஎஸ் வேகத்தையும் மாதத்திற்கு 3.3டிபி (அல்லது 3300ஜிபி) டேட்டாவையும், ஏர்ஃபைபர் இணைப்புடன் மாதத்திற்கு 1டிபி (அல்லது 1000ஜிபி) டேட்டாவையும் வழங்குகிறது. இத்திட்டத்தில் நுகர்வோருக்கு எந்தவிதமான ஓடிடி (OTT) சேவைகளும், அதாவது எந்த ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தாவும் வழங்கப்படுவதில்லை.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் (Reliance Jio Rs.399 Home Broadband Plan): ரிலையன்ஸ் ஜியோவும் தனது ரூ.399 வீட்டு பிராட்பேண்ட் திட்டத்தை நாடு முழுவதும் வழங்குகிறது. இந்த திட்டம் 30 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது. இதில் டேட்டா வரம்புகள் ஏர்டெல்லை போலவே உள்ளன. அதாவது ஃபைபர் இணைப்புடன் மாதத்திற்கு 3.3டிபி டேட்டாவும், ஏர்ஃபைபர் இணைப்புடன் மாதத்திற்கு 1டிபி டேட்டாவும் கிடைக்கிறது.

கிஸ்பாட்டின் கருத்து: நீங்கள் ஹோம் பிராட்பேண்ட் இணைப்பை (Home Broadband Connection) பெற விரும்பினால், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்; அதே சமயம் பார்தி ஏர்டெல்லையும் குறைத்து மதிப்பிட கூடாது, இதுவும் மிகவும் நம்பகமான ஒரு தேர்வாக இருக்கும்.

இருப்பினும் இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு - இண்டர்நெட் ஸ்பீட் மற்றும் ரூ.100 கட்டண வேறுபாடு மட்டும் தான். கூடுதலாக வெறும் 10 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடிற்காக ரூ.100 கூடுதலாக செலுத்தலாமா, வேண்டாமா என்பதை - உங்கள் தேவைகளை வைத்து - நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Vs Airtel Cheapest 3300GB Data Home Broadband Plans Rs 499 Vs Rs 399 Which is Best
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X