ஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்! ஜியோ vs ஏர்டெல்!
ஹெவி டேட்டா யூஸர்களுக்கான அதிக டேட்டா கொண்ட நீண்ட நாள் ப்ரீபெய்ட் பிளான் செலக்ட் செய்வதில் சிரமமாக உள்ளதா? கவலை வேண்டாம் ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் தனது பயனர்களுக்கென்று அதிக டேட்டா கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஏராளமான சலுகையுடன் ப்ரீபெய்ட் திட்டம்
அமேசான் ப்ரைம் சந்தாவுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டு உடன் ரூ.299, ரூ.249 மற்றும் ரூ.599 போன்ற திட்டங்களில் வழங்கி வருகிறது. இந்த திட்டத்துடன் இன்னும் பல பயனர்களுக்குத் தெரியாத ஒரு திட்டமும் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்
ஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.558 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் இன் இந்த ரூ.558 திட்டம் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டாவை தடையின்றி வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் அதிகளவு டேட்டா
இந்த திட்டத்தைப் பற்றி விரிவாகச் சொன்னால், இதன் கீழ் எந்த FUP வரம்பு இல்லாத வரம்பற்ற குரல் அழைப்பு சேவை, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், 3 ஜிபி தினசரி டேட்டா போன்ற சேவைகளை 82 நாட்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் இல் குறைந்த விலையில் அதிகளவு டேட்டாவுடன், அதிக வேலிடிட்டியுடன் கிடைக்கும் சிறந்த திட்டம் இதுவே.

ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்
இதேபோல் ஏர்டெலில் தினசரி 3ஜிபி கிடைக்கும் ஒரு சிறப்பு ப்ரீபெய்ட் திட்டமும் வெறும் ரூ.349 என்ற விலையில் வழங்குகிறது. இத்திட்டத்தின்படி பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு சேவை, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், 3 ஜிபி தினசரி டேட்டா சேவையை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

ஜியோவின் ரூ.509 திட்டம்
இதேபோல் ஜியோவிலும் ஹெவி டேட்டா யூஸர்களுக்கான அதிக டேட்டா கொண்ட நீண்ட நாள் ப்ரீபெய்ட் பிளானாக ரூ.509 திட்டம் இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 4ஜிபி டேட்டா, FUP வரம்பு இல்லாத வரம்பற்ற குரல் அழைப்பு சேவை, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை வெறும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications