Jio VS Airtel.. டெய்லி 3GB டேட்டாவுடன் இலவச OTT-களை அள்ளி கொடுக்கும் 5 திட்டங்கள்!
அடுத்த ரீஜார்ஜ் கட்டண விலை உயர்வு அறிவிக்கப்படும் வரையிலாக.. இப்போதைக்கு ஜியோ VS ஏர்டெல் (Jio VS Airtel) என்கிற போட்டிக்கு முடிவே இல்லை. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய இரண்டுமே இந்தியாவின் மிகவும் பிரபலமான இரண்டு டெலிகாம் சேவை வழங்குநர்கலாக உள்ளன. ஆனாலும் வெவ்வேறு வகையான விலையில் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.
தேர்வு செய்ய பல விருப்பங்கள் இருப்பதால், எது பெஸ்ட் பிளான் (Best Plan) மற்றும் எது கொடுக்கும் பணத்திற்கு மிகவும் மதிப்புள்ள (Value Plan) சலுகைகளை வழங்குகிறது? என்பதை முடிவு செய்வது - எப்போதுமே கடினமாக இருக்கும். குறிப்பாக புதிதாக ஒரு திட்டத்திற்கு அப்கிரேடாகும் போது அல்லது ஒரே மாதிரியான நன்மைகளை வழங்கும் இரண்டில் (ஜியோ VS ஏர்டெல்) ஒன்றை தேர்வு செய்யும் போது!

அப்படியாக நீங்கள் டெய்லி 3ஜிபி டேட்டாவை (Daily 3GB Data) வழங்கும் பிளானை தேடுகிறீர்கள் என்றால்.. உங்களுக்கு மொத்தம் 5 ஆப்ஷன்கள் உள்ளன. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவின் கீழ் டெய்லி 3ஜிபி டேட்டாவை வழங்கும் 3 பிரபலமான திட்டங்கள் உள்ளன. மறுகையில் உள்ள ஏர்டெல்லிடம் 3ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும் 2 முக்கிய திட்டங்கள் உள்ளன.
1. ஜியோவின் ரூ. 449 திட்டம் (Jio Rs 449 Plan): இதுதான் இருப்பதிலேயே மிகவும் மலிவு விலை விருப்பம் ஆகும். ரூ. 449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் ஆனது 28 நாட்கள் செல்லுபடியாகும். இது டெய்லி 3ஜிபி டேட்டா என மொத்தம் 84 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோகிளவுட் மற்றும் ஜியோடிவிக்கான (JioTV) அணுகல்களையும் வழங்குகிறது
2. ஜியோவின் ரூ.1,199 திட்டம் (Jio Rs 1199 Plan): இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ.449 பேக்கின் கீழ் கிடைக்கும் அதே நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும். கூடுதலாக இது 3 மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டாருக்கான (Jio Hotstar) இலவச சந்தாவையும் வழங்குகிறது.
3. ஜியோவின் ரூ.1,799 திட்டம் (Jio Rs 1799 Plan): மேலே பார்த்த ஜியோவின் ரூ.1,199 மற்றும் இந்த ரூ.1,799 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்குகளுக்கு இடையிலான ஒரே வித்தியாசம் - கூடுதலாக கிடைக்கும் இலவச நெட்பிளிக்ஸ் சந்தா மட்டுமே. ரூ.1,799 ஆனது வழக்கமாக மாதத்திற்கு ரூ.199 க்கு இருக்கும் நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic) திட்டத்திற்கான இலவச சந்தா கூடுதலாக கிடைக்கும்.
4. ஏர்டெல்லின் ரூ.838 திட்டம் (Airtel Rs 838 Plan): இந்தத் திட்டம் 56 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளேவிற்கான (Airtel Xstream Play) இலவச அணுகலையும் வழங்குகிறது. இதன்கீழ் 25 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களின் கன்டென்ட்களை அணுகலாம். இதில் அமேசான் பிரைம் லைட்டிற்குமான அணுகலும் உள்ளது.
5. ஏர்டெல்லின் ரூ.1,798 திட்டம் (Airtel Rs 1789 Plan): இது 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வரும் ஏர்டெல்லின் அதிக விலை நிர்ணயம் கொண்ட திட்டங்களில் ஒன்றாகும். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கில் ரூ.838 திட்டத்தின் அதே நன்மைகள் கிடைக்கும். ஆனால் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தாவிற்கு பதிலாக நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளானிற்கான இலவச சந்தா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








