Home
News

அம்பானி ஒரே போடு.. இனிமே மாசம் ரூ.150 பட்ஜெட்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 3600 எஸ்எம்எஸ்கள்!

ஜியோ (Jio) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு ரூ.150 கூட செலவில்லாமல், 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் (Airtel), விஐ (Vi) நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அதிக கஸ்டமர்களை கொண்ட ஜியோ நிறுவனத்திலும் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice Only Plans) இருக்கிறது. ஆனால், மற்ற நிறுவனங்களைவிட ஜியோ மலிவு விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கொடுக்கிறது. அதிகபட்சம் 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது.

அம்பானி ஒரே போடு.. இனி மாசம் ரூ.150 பட்ஜெட்.. 336 நாட்கள் வேலிடிட்டி!

இந்த 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை மாதத்துக்கு வெறும் ரூ.145 செலவில் கொடுக்கிறது. அதாவது, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,748ஆக இருக்கிறது. இதற்கு 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கான செலவை கணக்கிட்டால், ரூ.145 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது.

ஜியோ 336 நாட்கள் வேலிடிட்டி திட்டம் (Jio 336 Days Validity Plan): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 1 வருடத்துக்கு சிம் ஆக்டிவ் (One Year SIM Active) கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்ய முடிகிறது.

அதேபோல வருடம் முழுவதுக்கும் 3,600 எஸ்எம்எஸ்கள் அனுப்ப கிடைக்கிறது. இந்த சலுகைகளுடன் ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) சலுகை வருகிறது. ஜியோ அன்லிமிடெட் ஆஃபரில் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் 50 ஜிபிக்கான ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் சலுகைகள் இதில் கிடையாது.

வருடம் முழுவதும் வெறும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்த விலையை விட கம்மியான விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டம் வேண்டுமானால், உங்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதிலும் டேட்டா உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காது. வாய்ஸ் கால்கள் மட்டும்தான்.

ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டி திட்டம் (Jio 84 Days Validity Plan): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு கிட்டத்தட்ட 3 மாதங்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த மாதங்கள் முழுவதும் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. இதன் விலை ரூ.448ஆக இருக்கிறது.

மொத்தமாகவே 1000 எஸ்எம்எஸ்கள் மட்டுமே அனுப்ப கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக வழக்கமாக கிடைக்கும் ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகை கிடைக்கிறது. வாய்ஸ் ஒன்லி திட்டங்களில் இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இதற்கு அடுத்து டேட்டாவுடன் ஒரு மலிவு விலை திட்டம் உள்ளது.

ஜியோ 28 நாட்கள் வேலிடிட்டி திட்டம் (Jio 28 Days Validity Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் வாய்ஸ் ஒன்லி திட்டம் போலவே மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஆனால், கூடுதலாக டேட்டா சலுகையை கொடுக்கிறது. இருப்பினும், இது அதிகப்படியான டேட்டா கிடையாது. 28 நாட்களுக்கும் சேர்த்தே உங்களுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படுகிறது.

அதேபோல 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஜியோ டிவி + ஜியோ ஏஐ கிளவுட் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.189ஆக இருக்கிறது. ஜியோவில் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் திட்டமாக இந்த ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த மூன்று திட்டங்கள் மட்டுமே மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Voice Plan Not Even Rs 150 Per Monthly Cost 336 Days Validity Unlimited Voice 3600 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X