Home
News

Airtel, Vi கதை முடிந்தது.. இனி ரூ.147-க்கு ரீசார்ஜ்.. Jio அம்பானி போட்ட மெகா பிளான்.. 6 வாய்ஸ் ஒன்லி பிளான்!

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை மூக்கில் விரல் வைக்க செய்யும்படியான வாய்ஸ் ஒன்லி திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வெறும் ரூ.147 விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை 22 நாட்களுக்கு கொடுக்கிறது. இப்படி 6 திட்டங்கள் கிடைக்கின்றன.

டிராய் உத்தரவுபடி கம்மியான வேலிடிட்டியிலும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்ய ஜியோ நிறுவனம் முன்வந்துள்ளது. ஏற்கனவே, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இதுபோன்ற வேலிடிட்டியில் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்தன. ஆனால், ஜியோவின் திட்டங்கள் அதைவிட மலிவாக இருக்கின்றன.

Airtel, Vi கதை முடிந்தது.. இனி ரூ.147-க்கு ரீசார்ஜ்.. Jio அம்பானி!

ஜியோ வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் ரூ.147 (Jio Voice Only Prepaid Plan Rs 147): இப்போது, ஜியோ நிறுவனத்தின் மினிமம் ரீசார்ஜ் திட்டமாக இது மாறிவிட்டது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 300 எம்எஸ்களை கொடுக்கிறது.

ஜியோ வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் ரூ.177 (Jio Voice Only Prepaid Plan Rs 177): இந்த வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 300 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுக்கிறது.

ஜியோ வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் ரூ.196 (Jio Voice Only Prepaid Plan Rs 196): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், 300 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

ஜியோ வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் ரூ.197 (Jio Voice Only Prepaid Plan Rs 197): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் காலண்டர் மாத வேலிடிட்டியை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஆகவே, 31 நாட்கள் அல்லது 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும்.

ஜியோ வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் ரூ.448 (Jio Voice Only Prepaid Plan Rs 448): 84 நாட்கள் வேலிடிட்டியில் இந்த வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இதிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். ஆனால், 1000 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். அதேபோல ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஆப்களும் கிடைக்கும்.

ஜியோ வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் ரூ.1,748 (Jio Voice Only Prepaid Plan Rs 1,748): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டமே அதிக விலை கொண்ட திட்டமாக இருக்கிறது. ஆகவே, இதற்கு ஏற்ப சலுகைகளும் அதிகமாக கிடைக்கின்றன. அதாவது, 336 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது. 3600 எஸ்எம்எஸ்களை இந்த வாய்ஸ் ஒன்லி திட்டம் கொடுத்து இருக்கிறது.

வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. இந்த திட்டங்களில் டேட்டா சலுகைகள் கிடைக்காது. அதேபோல டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்தால், பயன்படுத்தி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Voice Only Prepaid Plans Starting At Rs 147 With 22 Days Validity Check 6 New Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X