Home
News

Airtel, Jio சிம்முக்கு கும்பிடு.. இனி மட்ட ரேட்ல 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. எது பெஸ்ட்?

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்து உள்ளன. இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் எந்த நிறுவனத்தில் அதிக சலுகைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொண்ட திட்டங்களை மத்திய அரசின் உத்தரவுபடி கொடுத்து வருகின்றன. இதில் அதிக கஸ்டமர்களை கொண்ட ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போடு சலுகைகளை கொடுத்து வருகின்றன.

Airtel, Jio சிம்முக்கு கும்பிடு.. மட்ட ரேட்ல 84 நாட்கள் வேலிடிட்டி!

இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகின்றன. ஏனென்றால், ஆரம்ப விலைக்கு கிடைக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களே (Voice Only Plan) 84 நாட்களில் இருந்து தொடங்குகின்றன. இதில் ஜியோ நிறுவனம் சற்று மலிவான விலைக்கு திட்டத்தை கொடுத்துள்ளது. ஏர்டெல் கூடுதல் விலைக்கு கொடுக்கிறது. ஆனால், சலுகை அதிகமாக உள்ளது.

ஜியோ ரூ. 448 திட்ட விவரங்கள் (Jio Rs 448 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. 1000 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

இந்த வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு அடுத்து ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆகிய ஆப்களின் சலுகை கிடைக்கிறது. இதில் ஜியோ ஏஐ கிளவுட்டில் ஸ்டோரேஜ் கொடுக்கப்படாது. அதேபோல ஜியோ டிவியில் பிரீமியம் அணுகல் கிடைக்காது. இலவமாக கிடைக்கும் அணுகல்கள் மட்டுமே கொடுக்கப்படும்.

ஏர்டெல் ரூ. 469 திட்ட விவரங்கள் (Airtel Rs 469 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் குறைவாக கிடைக்கிறது. அதாவது, 900 எஸ்எம்எஸ்கள் மட்டுமே வருகிறது.

ஜியோவில் 1000 எஸ்எம்எஸ்கள் கிடைத்தது. இதுபோக ஏர்டெல்லில் கூடுதல் சலுகைகள் இருக்கின்றன. முந்தைய திட்டத்தில் ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் கிடைத்தது. அதேபோல ஏர்டெல்லில் பிரத்யேக சலுகைகளாக அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதை 12 மாதங்களுக்கு ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும்.

இந்த சந்தாவை தனியாக பெற்றால், ரூ.4,000 செலவு செய்ய வேண்டும். ஆனால், ஏர்டெல் நிறுவனம் முற்றிலும் இலவமாக கொடுத்து உள்ளது. மேலும், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes), ஸ்பேம் அலெர்ட் சலுகைகளும் கொடுத்து உள்ளது. இப்படி கூடுதல் சலுகைககளில் ஏர்டெல் நிறுவனம் கொடுக்கிறது. இருப்பினும், கூடுதல் சலுகைகள் இல்லையென்றால், ஜியோவே முந்துகிறது.

ஏனென்றால், ஏர்டெல் நிறுவனத்தைவிட மலிவான விலைக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுத்து, கூடவே 1000 எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது. ஆனால், ஏர்டெல்லில் 900 எஸ்எம்எஸ்கள் மட்டுமே வருகிறது. ஆகவே, கூடுதல் சலுகையின் படி ஏர்டெல் முந்துகிறது. விலை மற்றும் எஸ்எம்எஸ் போன்ற முக்கிய சலுகையில் ஜியோ முந்துகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Voice Only Plan Rs 448 Vs Airtel Voice Only Plan Rs 469 With Unlimited Calls 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X