Jio போட்ட போடு.. வாய்ஸ் ஒன்லி திட்டங்களை ரீசார்ஜ் பண்ணீங்களா.. டேட்டா வவுச்சர் ஆட் ஆகுமா.. ஜியோ சொன்ன பதில்!
டிராய் (TRAI) என்று அழைக்கப்படுகிற இந்திய தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) உத்தரவின்படி ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொண்ட திட்டங்களை கொண்டுவந்தன. ஆனால், இதில் டேட்டா வவுச்சர்களை ஆட் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகம் ஜியோ கஸ்டமர்களுக்கு இனிமேல் வேண்டாம்.
ஏனென்றால், சோஷியல் மீடியாக்களில் எழுந்த இந்த கேள்விக்கு ஜியோகேர் (JioCare) பதிலளித்துள்ளது. அதில், டேட்டா ஒன்லி பேக்குகள் (Data-Only Packs) குறிப்பிட்ட வேலிடிட்டியில் கஸ்டமர்களுக்கு கிடைக்கின்றன. ரூ.11, ரூ.19 மற்றும் ரூ.29 முதல் ரூ.289 மற்றும் ரூ.359 வரையில் திட்டங்கள் இருக்கின்றன. கூடுதல் டேட்டாவுக்கு இந்த திட்டங்களில் ஒன்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

இருப்பினும், உங்களிடம் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே கொண்ட திட்டம் ஆக்டிவாக இருந்தால் டேட்டா பூஸ்டர்கள் (Data Boosters) மற்றும் டேட்டா ஆட்-ஆன் பேக்குகளை (Data Add-On Packs) ரீசார்ஜ் செய்ய முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறது. இதை TelecomTalk செய்தியாக வெளியிட்டிருக்கிறது. இதை ஜியோ மாற்றவும் வாய்ப்புள்ளது.
ஏனென்றால், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வாய்ஸ் ஒன்லி திட்டங்களில் டேட்டா வவுச்சர்களை கொடுக்கின்றன. இதனால், ஜியோ கஸ்டமர்களும் இதேபோல டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ள அனுமதி கொடுக்குமாறு ஜியோ நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆகவே, ஜியோ கொடுக்கலாம். இந்த நேரத்தில் வாய்ஸ் திட்டங்களை பார்ப்போம்.
ஜியோ வாய்ஸ் ஒன்லி திட்டம் ரூ 1748 (Jio Voice Only Plan Rs 1748): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. அதேபோல 336 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 3600 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
மேலும், மற்ற திட்டங்களில் கிடைப்பதை போலவே ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதைவிட மலிவான விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டம் வேண்டுமானால், ஜியோ கஸ்டமர்கள் ரூ.448 மதிப்பிலான திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ வாய்ஸ் ஒன்லி திட்டம் ரூ 448 (Jio Voice Only Plan Rs 448): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கு கம்மியான விலையிலும் வேலிடிட்டியிலும் வேறு திட்டங்கள் கிடையாது. ஆகவே, ஆரம்ப விலையில் வாய்ஸ் கால்கள் திட்டம் வேண்டுமானால், இதைவிட வேறு திட்டம் இல்லை. முந்தைய திட்டத்தில் பார்த்த சலுகைகள் இதிலும் இருக்கிறது.
அதாவது, அதில் 336 நாட்களுக்கும் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைத்ததைப் போல இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. மேலும், மொத்தமாக 1000 எஸ்எம்எஸ்களும், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களின் சலுகையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








