Home
News

ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே: தினசரி 3 ஜிபி டேட்டா வேண்டுமா?- இதோ வழி!

ஜியோ, வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் அதன் வாடிக்கையாளர்கள் தினசரி 3 ஜிபி டேட்டா பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்மார்ட்போன் பயன்பாட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதிலும் குறிப்பாக கொரோனா தொற்று பரவலை தடுக்க அரடு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் தங்களின் நேரத்தை ஸ்மார்ட்போன்களில் தான் செலவிட்டு வருகின்றனர். இதையடுத்து ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நேரமும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

தினசரி 1 ஜிபி டேட்டா

தினசரி 1 ஜிபி டேட்டா

ஸ்மார்ட்போன்கள் ஏணைய பயன்பாடுகளுக்கு இணைய சேவை தேவை. இதையடுத்து தினசரி 1 ஜிபி டேட்டாவோ, ஒன்றரை ஜிபி டேட்டாவோ போதாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களை குறித்து பார்க்கலாம்.

வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங்

வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங்

இணைய சேவை அதிகரிப்பின் காரணமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மலிவான விலையில் அதிக டேட்டா வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங் மற்றும் வீட்டிலிருந்து வேலை உள்ளிட்ட பயன்பாட்டு வாடிக்கையாளர்களுக்கு 3 ஜிபி தரவு வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.588 திட்டம்

ஏர்டெல் ரூ.588 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.558 ப்ரீபெய்ட் திட்டமானது 56 நாள் செல்லுபடியாகும். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. அதோடு ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் சேவையும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சேவைகளுக்கான இலவச சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஹலோ ட்யூன் சேவையை வழங்குகின்றன.

வோடபோன் ரூ 399 திட்டம்

வோடபோன் ரூ 399 திட்டம்

வோடபோன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் அதீத டேட்டா சலுகை திட்டங்களை வழங்கியது. இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டுமென்றால் வோடபோன் இரட்டை டேட்டா நன்மை திட்டங்கள்.

இரட்டை தரவு திட்டங்கள்

இரட்டை தரவு திட்டங்கள்

ரூ .939 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும்போது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைத்தது. ஆனால் இப்போது இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு கிடைக்கிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்பு சலுகைகளையும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அணுகலையும் வழங்குகிறது.

வோடபோன் ரூ 399 திட்டம்

வோடபோன் ரூ 399 திட்டம்

வோடபோன் ரூ 399 திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்கள் 56 ஆகும். இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் ZEE5 மற்றும் வோடபோன் ப்ளேயின் சந்தாக்களையும் பெறுகிறார்கள். ஆந்திரா, பீகார், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா, வடகிழக்கு பகுதிகள், பஞ்சாப் மற்றும் உ.பி. மேற்கு வட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை தரவு திட்டங்கள் பெற முடியாது. பிற வட்டங்களில் இந்த திட்டம் இரட்டை தரவு திட்டமாகும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ரூ .349 திட்டத்தை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை 4 ஜி வேகத்தில் வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

தினசரி 3 ஜிபி டேட்டா

தினசரி 3 ஜிபி டேட்டா

அதோடு பிற நெட்வொர்க்குகள் குரல் அழைப்புகளுக்கு 1,000 நிமிடங்களும் மற்றும் ஜியோ டூ ஜியோ அழைப்புக்கு வரம்பற்ற சலுகையையும் அறிவிக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோசாவன், ஜியோ டிவி உள்ளிட்ட ஆன்லைன் பயன்பாடுகளுக்கான அணுகலைப் பெறுகிறார்கள்.

Best Mobiles in India

English summary
jio, vodafone, airtel: best prepaid recharge plans with 3GB daily data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X