ஆஹா மொத்தம் 740 ஜிபி டேட்டா: ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே- இதோ அட்டகாச திட்டங்கள்!

|

ஜியோ, வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் அதன் வாடிக்கையாளர்கள் 365 நாட்கள் டேட்டா சலுகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்மார்ட்போன் பயன்பாட்டர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதிலும் குறிப்பாக கொரோனா தொற்று பரவலை தடுக்க அரடு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் தங்களின் நேரத்தை ஸ்மார்ட்போன்களில் தான் செலவிட்டு வருகின்றனர். இதையடுத்து ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நேரமும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

365 நாட்கள் டேட்டா

365 நாட்கள் டேட்டா

ஸ்மார்ட்போன்கள் ஏணைய பயன்பாடுகளுக்கு இணைய சேவை தேவை. இதையடுத்து தினசரி 1 ஜிபி டேட்டாவோ, ஒன்றரை ஜிபி டேட்டாவோ போதாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 365 நாட்கள் டேட்டா பெரும் வகையிலான ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

அதிக டேட்டா வழங்கும் திட்டங்கள்

அதிக டேட்டா வழங்கும் திட்டங்கள்

இணைய சேவை அதிகரிப்பின் காரணமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மலிவான விலையில் அதிக டேட்டா வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங் மற்றும் வீட்டிலிருந்து வேலை உள்ளிட்ட பயன்பாட்டு வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நாள் சலுகை குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.2478 திட்டம்

ஏர்டெல் ரூ.2478 திட்டம்

ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரூ.2478 திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும், இதில் மொத்தமாக 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக வரம்பற்ற குரல் அழைப்பு வசதிகளும் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்!அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.2599 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.2599 திட்டம்

ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரூ.2599 திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும், இதில் மொத்தமாக 740 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோ வரம்பற்ற குரல் அழைப்பு

ஜியோ வரம்பற்ற குரல் அழைப்பு

கூடுதலாக ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரல் அழைப்பு பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 12,000 நிமிட குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ.2399 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.2399 திட்டம்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.2399 திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும், இதில் மொத்தமாக 547 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
jio, vodafone, airtel: best prepaid recharge plans with 365 days validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X