தினசரி 3 ஜிபினு மொத்தம் 84 ஜிபி வேண்டுமா., அப்போ இதான் ஒரே வழி!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஜியோ, வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ள தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் வகையிலான திட்டங்களை வழங்குகின்றன. அதுகுறித்து பார்க்கலாம்.

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவில் பெரிதளவு பரவாமல் தடுக்க பிரதமர் மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அதாவது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மொபைல்தான் பெரும்பாலான நேரம் செலவு
இதையடுத்து பெரும்பாலானோர் தங்களது நேரத்தை மொபைல் போனில்தான் செலவிட்டு வருகின்றனர். அதேபோல் பல்வேறு அலுவலகத்தை மூடும் நிலை ஏற்பட்டதோடு, அதுமட்டுமின்றி அலுவலகத்தில் பணிபுரிபவர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும்படி அறிவுறுத்தி வருகிறது.

டேட்டா பிரதான தேவையாக இருக்கிறது
அப்படி வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு டேட்டா பிரதான தேவையாக இருந்து வருகிறது. மேலும் மொபைல் போனில் ஆன்லைன் கேம், சமூகவலைதளங்கள் என தங்களது நேரத்தை முழுமையாக அதில் செலவளித்து வருகின்றனர்.

தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் வகையிலான திட்டங்கள்
அதற்கும் டேட்டா பிரதான தேவையாக இருக்கிறது. இதை சரிகட்டும் வகையில் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இதை பூர்த்தி செய்யும் வகையில் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் வகையிலான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

வோடபோன் ரூ.249-க்கு வழங்கும் திட்டம்
ரூ.249-க்கு முன்னதாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கி வந்தது. தற்போது இதில் தினசரி 1.5 ஜிபி என்பதற்கு பதிலாக 3 ஜிபி என அறிவித்துள்ளது.

வோடபோன் ரூ.399-க்கு திட்டம்
ரூ.399-க்கு வழங்கப்பட்டு வந்த திட்டமும் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரம்பற்ற அழைப்பு தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்திலும் 3 ஜிபியாக அறிவித்துள்ளது.

ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினசரி 3 ஜிபி டேட்டா
அதேபோல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதேபோல் இந்த திட்டமானது ரூ.349-க்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 3 ஜிபி என்ற வீதம் 84 ஜிபியை மொத்தமாக வழங்குகிறது.

ஏர்டெல் நிறுவனம் தினசரி 3 ஜிபி டேட்டா
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து தினசரி 3 ஜிபி வழங்கும் வகையில் ஒரு டேட்டாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது ரூ.398-க்கு வழங்குப்படுகிறது. இதன்மூலம் தினசரி 3 ஜிபி டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. அதேபோல் இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications