Home
News

ஜியோ, வி, ஏர்டெல்: ரூ.300-க்குள் கிடைக்கும் சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள்.!

ஏர்டெல், ஜியோ, வி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம். உள்ளன இன்னும் சில மாதங்களில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 5ஜி சேவை வந்தால் பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்படும் என்றே கூறலாம்.

ஏர்டெல், ஜியோ, வி

ஏர்டெல், ஜியோ, வி

மேலும் ஏர்டெல், ஜியோ, வி உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.300-க்குள் சிறந்த நன்மைகளை வழங்கும் திட்டங்களை கொண்டுள்ளன. அதன்படி இப்போது இந்த டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களின் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ரூ.300-க்குள் ஜியோ வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ.300-க்குள் ஜியோ வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

  • ஜியோ நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்;குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே மொத்தமாக இந்த திட்டத்தில் 42ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர அன்லிமிடெட் கால் அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.
  • ஜியோ வழங்கும் ரூ.149 திட்டம் ஆனது தனசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். பின்பு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
  • ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு,தினசரி 100 எஸ்எம்எஸ். ஜியோ பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தா உள்ளிட்ட நன்மைகளும் இதில் கிடைக்கும்.
  • ரூ.300-க்குள் ஏர்டெல் வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

    ரூ.300-க்குள் ஏர்டெல் வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

    • ஏர்டெல் வழங்கும் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமுக்கான அணுகல் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.
    • ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பின்பு அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோவுக்கான 30 நாள் மொபைல் பதிப்பு சோதனை, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், விங்க் மியூசிக் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ், அமேசான் ப்ரைம் வீடியோவுக்கான 30 நாள் மொபைல் பதிப்பு சோதனை, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், விங்க் மியூசிக் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ரூ.300-க்குள் வோடபோன் ஐடியா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

      ரூ.300-க்குள் வோடபோன் ஐடியா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

      • வி என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியாவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வீக்கெண்ட் ரோல் ஓவர் சலுகையை வழங்குகிறது இந்த திட்டம்.அதேபோல் அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.
      • வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.299 திட்டம் ஆனது தினசரி மொத்தமாக 4ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது டபுள் டேட்டாநன்மை இந்த திட்டத்தில் உள்ளது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகள் இந்த திட்டதில் கிடைக்கும்.
      • வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Jio, Vi, Airtel: Super Recharge Plans Available for Under Rs.300: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X