அது என்ன இதே விலையில் மொத்தை சலுகையும்: ரொம்ப கம்மி விலை- ஜியோ, ஏர்டெல், விஐ பயனரா நீங்கள்!

|

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் முதல் மூன்று இடங்களில் இருப்பது என்றால் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் ஆகும். நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் இரண்டு சிறந்த மலிவு விலை திட்டம் குறித்து பார்க்கையில் அது ரூ.149 மற்றும் ரூ.199 விலையில் கிடைக்கிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களை பொறுத்தவரையில் இந்த இரண்டு விலையிலும் திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் கிடைக்கும் நன்மைகளை வேறுபட்டிருக்கிறது இதன் சலுகைகளை பார்க்கலாம்.

டேட்டா மற்றும் அழைப்பு சலுகைகள்

டேட்டா மற்றும் அழைப்பு சலுகைகள்

டேட்டா மற்றும் அழைப்பு சலுகைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.149 மற்றும் ரூ.199 விலையில் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன. ஜியோவின் ரூ.149 திட்டத்தின் சலுகை குறித்து பார்க்கையில் தினசரி 1 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். அதேபோல் ரூ.199 திட்டத்தில் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ஏர்டெல் மற்றும் விஐ திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில், இந்த இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கூடுதல் எஸ்எம்எஸ் மற்றும் பொழுதுபோக்கு நன்மைகளை வழங்குகின்றன. இதில் கிடைக்கும் சலுகைகளை விரிவாக பார்க்கலாம்.

ரூ.149 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.149 விலையில் கிடைக்கும் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.149 விலையில் கிடைக்கும் திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது பயனர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா என மொத்தம் 24 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதன் மற்றொரு நன்மை என்னவென்றால் இந்த திட்டத்தில் பயனர்கள் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களை பெறுவார்கள்.

ஏர்டெல் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில்., வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்பு சலுகைகளுடன் மொத்தம் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா நன்மைகளை கிடைக்கப்பெறவில்லை. இந்த திட்டத்தின் மூலம் ஏர்டெல் பயனர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 300 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக் மற்றும் இலவச ஹலோ டியூன்கள் சந்தாக்களை வழங்குகிறது.

விஐ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

விஐ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

விஐ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில் இந்த திட்டம் மொத்தம் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. திட்டத்தின் மூலம் தினசரி 300 எஸ்எம்எஸ்களை பெறுவீர்கள். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் வரம்பற்ற அழைப்பு சலுகைகளை வழங்குகிறது. விஐ இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு கூடுதலாக 1 ஜிபி டேட்டாவை பெறுகிறது. அதோடு விஐ திரைப்படங்கள் மற்றும் டிவி அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 42 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. அதோடு ஜியோ பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில், இந்த திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதோடு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. அமேசான் பிரைம் வீடியோ, விங்க் மியூசிக், இலவச ஹலோ டியூன்கள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் அணுகல் ஆகியவைகளை வழங்குகிறது.

விஐ ரூ.199 திட்டம்

விஐ ரூ.199 திட்டம்

விஐ ரூ.199 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில் இது ஜியோவின் வரம்பற்ற குரலழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. விஐ ரூ,199 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் விஐ திரைப்படங்கள் மற்றும் டிவி அணுகலை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Jio, VI, Airtel Offers Rs.149 and Rs.199 Prepaid Plans: Here the Plans Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X