Home
News

ஜியோ, ஏர்டெல், விஐ: சிறந்த வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டங்களை வழங்கும் நிறுவனம் எது?

வீட்டில் இருந்தே வேலைபார்ப்பவர்களுக்கான சிறந்த திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு வழங்குகின்றன. அதுகுறித்து பார்க்கலாம்.

றிவிக்கப்பட்ட நாளில்

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது ஆகியவை பிரதானமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான இணையத்தேவையை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகையோடு அறிவித்து வருகின்றன. அதுகுறித்து பார்க்கலாம்.

ட்டில் இருந்தே வேலை பார்ப்

மேலும்வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு பிரதானமாக இருப்பது இணைய சேவை. காலை தொடங்கி அலுவலகம் ஒதுக்கிய நேரம் முழுவதும் தங்களது மடிக்கணினியிலோ, மொபைல்களிலிலோ வேலை பார்ப்பதற்கு பிரதானமாக இருப்பது இணைய தேவைதான். அதை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வழங்குகின்றன. அந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம் ரூ.251 ஆகும். இந்த திட்டத்தில் 50 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. ஆனாலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி தெளிவாக கூறப்படவில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றாலm ஏர்டெல்லின் இந்த டேட்டா திட்டத்தில் காலாவதி தேதி என்று எதுவும் இல்லை, அதாவது இது காம்போ ப்ரீபெய்ட் திட்டத்தைப் போலவே ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்.

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா நிறுவனம் ஆனது மூன்று வொர்க் ஃப்ரம் ஹோம்' திட்டங்களை வழங்குகிறது. அதன்படி வோடபோன் ஐடியாவின் ரூ.251 திட்டம் ஆனது 50 ஜிபி டேட்டாவை 28 நாட்கள் என்கிற செல்லுபடியுடன் வழங்குகிறது. பின்பு இந்நிறுவனத்தின் ரூ.351 பேக் ஆனது 56 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பட்டியலில் மூன்றாவது திட்டத்தின் விலை ரூ.355 ஆகும் இது நன்மைகளின் அடிப்படையில் ரூ.251 டேட்டா பேக் ஆகும், ஆனால் இது ZEE5 பிரீமியம் மெம்பர்ஷிப் உடன் வருகிறது. இது 28 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டா நன்மைகளுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் மூன்று வொர்க் ஃப்ரம் ஹோம்' திட்டங்களை வழங்குகிறது. அதன்படி ஜியோவின் ரூ.151 திட்டமானது 30ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அடுத்ததாக ரூ.201 மற்றும் ரூ.251 திட்டங்கள் உள்ளன. இவைகள் முறையே 40 ஜிபி மற்றும் 50 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டங்களும் 30 நாட்கள்வேலிடிட்டி-ஐ வழங்குகின்றன.

ஜியோவின் இந்த திட்டங்கள் வாய்ஸ் கால்கள் அல்லது எஸ்எம்எஸ் சலுகைகள் இல்லாமல் ‘கிரிக்கெட்' பேக் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்கள் போன்ற பல திட்டங்களையும் ஜியோ வழங்குகிறது.

  பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வொர்க் ஃப்ரம் ஹோம் என்று அழைக்கப்படும் ரூ.251 திட்டம் ஆனது 70ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டதின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Jio, VI, AIrtel Offers Best Work From Home Plans For its Customers: Here the List!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X