ஜியோ, விஐ, ஏர்டெல் வழங்கும் ரூ.100-க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!

|

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதில் ரூ.100-க்கு ஏணைய திட்டங்கள் கிடைக்கிறது. ரூ.100-க்கு கீழ் ஏர்டெல், விஐ மற்றும் ஜியோ வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரூ.100-க்கு கீழ் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்

ரூ.100-க்கு கீழ் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்

ஏர்டெல், விஐ மற்றும் ஜியோ நிறுவனங்கள் ரூ.100-க்கு கீழ் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் வழங்குகின்றன. இந்த திட்டங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்றாலும் இதில் டேட்டா நன்மைகள், குரலழைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.

ரீசார்ஜ் திட்டங்கள் ஆரம்ப விலை

ரீசார்ஜ் திட்டங்கள் ஆரம்ப விலை

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.19 முதல் தொடங்குகின்றன. ஏர்டெல் வழங்கும் ரூ.48 ரீசார்ஜ் திட்டத்தில் 3 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. விஐ ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.16 முதல் தொடங்குகிறது. அதோடு ஜியோ ரூ.10 முதல் ரீசார்ஜ் திட்டங்களை தொடங்குகின்றன.

குறைந்த விலையில் சிறந்த திட்டங்கள்

குறைந்த விலையில் சிறந்த திட்டங்கள்

ரீசார்ஜ் திட்டங்கள் பல்வேறு காலவரையில் கிடைக்கிறது. யூடியூப் வீடியோக்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் திடீரென இணைய வரம்பு தீர்ந்தவுடன் என்ன செய்வது என்று குழப்பம் ஏற்படும். அப்போது ரூ.100-க்கு மேல் செலவழிக்க விரும்பாத நபர்களுக்கு ரூ.100-க்கு கீழ் கிடைக்கும் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவின் வேகமான 4ஜி நெட்வொர்க் இதுவா?- வேகத்தில் Vi, அதிகத்தில் Jio!இந்தியாவின் வேகமான 4ஜி நெட்வொர்க் இதுவா?- வேகத்தில் Vi, அதிகத்தில் Jio!

ரூ.100 க்கு கீழ் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்:

ரூ.100 க்கு கீழ் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்:

ரூ.19-க்கு கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வரை தரவு கிடைக்கின்றன.

ரூ.48-க்கு கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்தமாக 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

ரூ.49-க்கு கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் 100 எம்பி டேட்டா மற்றும் குரலழைப்புடன் வருகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.79-க்கு கிடைக்கும் ரீசார்ஜ் திட்டத்தில் 200 எம்பி டேட்டா மற்றும் குரலழைப்புகள் கிடைக்கிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும்.

Vi ரூ.100-க்கு கீழ் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம்:

Vi ரூ.100-க்கு கீழ் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம்:

ரூ.16 ரீசார்ஜ் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் அதோடு விஐ ஆப் திரைப்படங்கள், டிவி ஷோ அணுகல் கிடைக்கின்றன.

ரூ.19-க்கு கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம் 200 எம்பி டேட்டா மற்றும் வரம்பற்ற குரலழைப்புகள் வழங்கப்படுகிறது. இது 2 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.39 ரீசார்ஜ் திட்டம் காம்போ திட்டமாகும். இது 28 நாட்கள் செல்லுபடியாகும். இதில் குரலழைப்பு மற்றும் 100 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.48 ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தமாக 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. வலை பயன்பாட்டில் கீழ் ரீசார்ஜ் செய்தால் இந்த திட்டத்தில் 200 எம்பி கூடுதல் டேட்டா கிடைக்கிறது.

ரூ.79 ரீசார்ஜ் திட்டத்தில் 400 எம்பி டேட்டா மற்றும் குரலழைப்பை 64 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. வலை பயன்பாட்டின் கீழ் ரீசார்ஜ் செய்தால் இந்த திட்டம் 200 எம்பி கூடுதல் தரவை வழங்குகிறது.

ரூ.98 திட்டம் இரட்டை தரவு சலுகையின் கீழ் வருகிறது. இதில் மொத்தம் 12 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

ரூ.100-க்கு கீழ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்:

ரூ.100-க்கு கீழ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்:

ரூ.10 ரீசார்ஜ் திட்டத்தில் 1 ஜிபி பாராட்டு டேட்டா 124 நிமிட பிற நிறுவன குரலழைப்புகளுடன் வருகிறது.

ரூ.20 ரீசார்ஜ் திட்டத்தில் 249 நிமிட பிற நிறுவன குரலழைப்புகள் மற்றும் 2ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

ரூ.50 ரீசார்ஜ் திட்டத்தில் 65 நிமிட பிற நிறுவன குரலழைப்புகள் மற்றும் 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.100 ரீசார்ஜ் திட்டத்தில் 1362 பிற நிறுவன குரலழைப்புகள் மற்றும் 10 ஜிபி டேட்டா நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Jio, Vi, Airtel Offers Best Prepaid Plans Under Rs.100

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X