மினிமம் ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.189 ரெடியா வைங்க.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!
ஜியோ நிறுவனத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை கொண்ட திட்டத்தை மினிமம் விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், வேல்யூ திட்டங்களின் கீழ் கிடைக்கும் ஜியோ ரூ.189 திட்டத்தை தவிர வேறு வழி இல்லை. இந்த திட்டம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களானது, மினிமம் விலைக்கு திட்டங்களை கொடுக்கின்றன. இது ஆரம்ப விலை திட்டங்களாகவும் இருக்கிறது. இதில் ஜியோ நிறுவனமானது, ரூ.189 ஆரம்ப விலைக்கு மினிமம் திட்டத்தை கொடுத்து உள்ளது. இதற்கு கீழ் விலை கொண்ட திட்டம் கிடையாது.

இதில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) என்று மூன்று சலுகைகளும் கொடுக்கப்படும். அதேபோல ஜியோ நிறுவனத்தின் ஆப்களின் சலுகையும் கிடைக்கும். ஜியோ நிறுவனத்தின் வேல்யூ விருப்பத்தின் கீழ் இந்த திட்டம் கிடைக்கும். ஆகவே, அந்த விருப்பத்துக்கு சென்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜியோ வேல்யூ ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 189 விவரங்கள் (Jio Value Prepaid Plan Rs 189 Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் 300 எஸ்எம்எஸ்களின் (300 SMS) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. 2 ஜிபி டேட்டாவையும் இந்த திட்டம் வழங்குகிறது.
ஆனால், இது லம்ப்-சம் சலுகையாக உள்ளது. ஆகவே, 28 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் முழுவதும் பயன்படுத்தலாம். தினசரி லிமிட் கிடையாது. இந்த 2 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முடிவதற்கு முன்பாகவே முடித்துவிட்டால், பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
முன்பே சொன்னபடி, ஜியோ ஆப்களையும் இந்த திட்டம் வழங்குகிறது. ஆகவே, ஜியோ டிவி (JioTV) ஆப் மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) ஆப் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை ஜியோ கஸ்டமர்களுக்கு தினசரி டேட்டாவுடன் ஆரம்ப விலை திட்டம் வேண்டுமானால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் ஒரு திட்டம் இருக்கிறது.
ஜியோ ரூ.198 திட்ட விவரங்கள் (Jio Rs 198 Plan Details): ஜியோவில் மட்டுமல்ல, டெலிகாம் மார்கெட்டிலேயே மலிவான விலைக்கு கிடைக்கும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டமாக இது இருக்கிறது. இவ்வளவு மலிவான விலைக்கு கிடைப்பதால், 22 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறலாம்.
இந்த டேட்டா போக தினமும் 2 ஜிபி டேட்டாவை (2GB Data) கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். ஆனால், இந்த டேட்டா 4ஜி வேகத்தில் (4G Speed) கிடைக்கும். இந்த 4ஜி டேட்டா முடிந்துவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும். ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன், நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் 28 ஜிபி 4ஜி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த திட்டமானது தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. முந்தைய திட்டத்தில் மொத்தமாகவே 300 எஸ்எம்எஸ் மட்டுமே கிடைத்தது. மற்ற சலுகைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகையும் கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications








