ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை எந்த திட்டங்களுடன் கிடைக்கிறது? இது தெரிந்தால் குழப்பமே வேண்டாம்..
இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, ரூ. 200 மற்றும் அதற்கும் அதிகமான ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் நன்மைகளை வழங்குகிறது. ஆனால், தற்போதைக்கு, பயனர்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று 'ஜியோமார்ட் மஹா கேஷ்பேக்' திட்டங்களைக் கிளிக் செய்யும் போது, பட்டியலில் வெறும் நான்கு திட்டங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இதனால், ஜியோ வாடிக்கையாளர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜியோவின் இந்த மஹா கேஷ்பேக் நன்மைகள் பல திட்டங்களுடன் வருகிறது.

ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் திட்டம் பற்றி குழப்பமா?
கேஷ் பேக் சலுகையைப் பெற விரும்பும் பயனர்கள் தற்போதைக்கு, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று 'ஜியோமார்ட் மஹா கேஷ்பேக்' திட்டங்களைக் கிளிக் செய்யும் போது, பட்டியலில் வெறும் நான்கு திட்டங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையானது ரூ. 200க்கு மேல் உள்ள அனைத்து திட்டங்களுடனும் கிடைக்கிறது. இந்த சலுகை பற்றி இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள மேலும் தொடர்ந்து படியுங்கள்.

எந்த திட்டங்களுடன் இந்த கேஷ் பேக் சலுகை கிடைக்கிறது?
ஜியோ ரூ. 299, ரூ. 666, ரூ. 719 மற்றும் ரூ. 2999 திட்டங்களுடன் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்துகிறது. ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் வகையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு திட்டங்கள் ரூ. 299, ரூ. 666, ரூ. 719 மற்றும் ரூ. 2999 ஆகும். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, ரூ. 200 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் உட்பட அனைத்து திட்டங்களும் ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையுடன் வருகிறது. பயனர்கள் ரூ. 200 வரை (ஒரு நாளைக்கு அதிகபட்சம்) ரீசார்ஜ் செய்தால் 20% கேஷ்பேக் வழங்கப்படும்.

நான்கு திட்டங்களுக்கு மட்டும் தான் ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் நன்மையா?
பயனர்கள் இந்த கேஷ்பேக்கை எதிர்கால ரீசார்ஜ்களுக்கு MyJio ஆப் அல்லது ஜியோ இணையதளத்தில் பயன்படுத்தலாம் அல்லது ரிலையன்ஸ் ரீடெய்ல் சேனல்கள் முழுவதும் பயன்படுத்தலாம். பயனர்கள் ரூ. 299, ரூ. 666, ரூ. 719 மற்றும் ரூ. 2999 திட்டங்களில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ஜியோ விரும்புகிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ அல்லாமல் ஜியோமார்ட் கேஷ்பேக் வழங்கும் போது, ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் பிரிவின் கீழ் ஜியோ நான்கு திட்டங்களைக் குறிப்பிட்டிருப்பது கொஞ்சம் மோசமாகத் தெரிகிறது.

குழப்பத்தில் ஏமாற்றம் அடையும் வாடிக்கையாளர்கள்
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பயனர்கள் 'அனைத்து ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் திட்டங்களையும் பார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்து, நான்கு திட்டங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்ட பக்கத்திற்குத் திருப்பிவிடப்படுவார்கள். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு உண்மையில்லாத போது, நான்கு திட்டங்களுடன் மட்டுமே கேஷ்பேக் வழங்கப்படுகிறது என்று வாடிக்கையாளர்கள் நிச்சயமாக நினைத்து ஏமாற்றம் அடைவது போல் ரீசார்ஜ் செய்யாமல் திரும்புகிறார்கள். இதுவே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் ஆஃபர்
ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் ஆஃபர், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் செய்யும் ரீசார்ஜ்களை அதிகரிக்க உதவும் வகையில் ரிலையன்ஸ் ரீடெய்ல் வழங்கும் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் நல்ல சலுகையாகும். ஆனால், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக ரீசார்ஜ்களைப் பெறும் வகையில் ஜியோ அதை வழங்குவது நாளின் முடிவில் கொஞ்சம் தவறாகும். எது எப்படியாக இருந்தாலும் நமது மக்கள் சலுகை கிடைக்கும் போது அதை வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. கிடைக்கும் நன்மையைச் சரியான நேரத்தில் பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications