Home
News

Jio யூசர்கள் வருகிற ஜனவரி 28 ஆம் தேதிக்கு முன் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.. ஏன்னா?

ஜியோ பயனர்கள் வருகிற ஜனவரி 28 ஆம் தேதிக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஏனென்றால் ஜியோஹாட்ஸ்டார் சேவையின் கீழ் ரூ.79 மதிப்புள்ள புதிய பிளானை சேர்த்த கையோடு.. ஏற்கனவே கிடைத்த சூப்பர் மற்றும் பிரீமியம் சந்தா திட்டங்களின் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன.

ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ள இந்த புதிய மாற்றங்கள் ஆனது வருகிற 2026 ஜனவரி 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதற்கிடையில் தான் "மிகவும் மலிவான விலைக்கு" ஜியோ சேவையின் கீழ் இலவச நெட்பிளிக்ஸ் சந்தா + ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா ஆகிய இரண்டையும் வழங்கும் திட்டம் ஒன்றும் உள்ளது. தெளிவாக தேர்வு செய்தால் பணம் மிச்சம் ஆகும்.

Jio யூசர்கள் ஜன.28 க்கு முன் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.. ஏன்னா?

விலை உயர்த்தப்பட்டஜியோஹாட்ஸ்டார் திட்டங்களை பொறுத்தவரை - ரூ.299 க்கு கிடைத்த 3 மாத கால ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டத்தின் விலை ரூ.349 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல ரூ.899 க்கு கிடைத்த 1 ஆண்டு கால ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டத்தின் விலை ரூ.1099 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ரூ.499 க்கு கிடைத்த 3 மாத கால ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியம் திட்டத்தின் விலை ரூ.699 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக ரூ.1499 க்கு கிடைத்த 1 ஆண்டு கால ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டத்தின் விலை ரூ.2199 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள பேஸிக் ஜியோ ஹாட்ஸ்டார் ரூ.79 திட்டம் ஆனது ஒரு நேரத்தில் 1 மொபைல் டிவைஸ்க்கான ஆதரவு மற்றும் விளம்பரங்களுடன் 1 மாத கால செல்லுபடியை வழங்குகிறது. இதோடு சேர்த்து ரூ.49 க்கு ஹாலிவுட் ஆட-ஆன்-ஐயும் சேர்க்க முடியும்.

ஒருவேளை உங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா மீது அல்லது அதன்கீழ் கிடைக்கும் கன்டென்ட்கள் மீது உங்களுக்கு ஆர்வமில்லை என்றால்.. மாறாக இலவச நெட்பிளிக்ஸ் + ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா வேண்டுமென்றால்.. அதற்கும் ஜியோவிடம் ஒரு சீப் ஆன திட்டம் உள்ளது. அதாவது ஜியோ சேவையின் கீழ் - இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் வரும் மலிவான திட்டம் (Jio Cheapest Plan with Netflix) ஒன்று உள்ளது

அது ரூ.1299 திட்டமாகும். இது புதிதாக அறிமுகமான திட்டம் அல்ல. இது மிக நீண்ட காலமாகவே உள்ளது. நன்மைகளை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றுடன் வருகிறது.

இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி இது நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டத்துடன் பயனர்கள் ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ க்ளவுட் (JioAICloud) ஆகியவற்றையும் பெறுவார்கள். ரூ.1299 உடன் தற்போது ஜியோ சிறப்பு சலுகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் புதிய கனெக்ஷன்களுக்கு 2 மாதங்களுக்கு ஜியோ ஹோம் சோதனை இலவசமாக கிடைக்கும். இதோடு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா 3 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும். மேலும் ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜில் 50ஜிபி இலவசமாக கிடைக்கும்.

கடைசியாக ரூ.2025-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) திட்டத்தை இலவசமாக பெறுவார்கள். இந்த் சாந்தாவின் மதிப்பு ரூ.35,100 ஆகும். மேலும் இது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரூ.1299-ன் கீழ் கிடைக்கும் "மேற்கண்ட" கூடுதல் சலுகைகள் ஆனது ரிலையன்ஸ் ஜியோ ரூ.2025-ன் கீழும் கிடைக்கிறது. அனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 200 நாட்கள் ஆகும். இந்த திட்டம் மொத்தம் 500 ஜிபி டேட்டாவுடன் வருகிறது, அதாவது பயனர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையும் கிடைக்கும். இதோடு பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் பெறுவார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Users Need to know This Cheap Netflix Plan Before New JioHotstar Plans Came to Effect From Jan 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X