Home
News

Jio + Airtel என.. 2 சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? அப்போ உங்களுக்கு ஒரு சூப்பரான குட் நியூஸ்!

டூயல் சிம் (Dual SIM) ஆதரவுடனான மொபைல் போனை வைத்துக்கொண்டு.. ஒரு சிம் ஸ்லாட்டில் ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) சிம் கார்ட்டையும்.. மற்றொன்றில் பார்தி ஏர்டெல்லின் (Bharti Airtel) சிம் கார்ட்டையும் பயன்படுத்துகிறீர்கள் என்றால்.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

இந்த குட் நியூஸ் ஓப்பன்சிக்னல் (OpenSignal) நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது. அறியாதோர்க்ளுக்கு ஓப்பன்சிக்னல் என்பது டெலிகாம் துறை வாடிக்கையாளர்களின் "மொபைல் நெட்வொர்க் அனுபவத்தை அளவிடுவதில்" (Quantifying Mobile-Network Experience) நிபுணத்துவம் பெற்ற ஒரு சுயாதீன பகுப்பாய்வு நிறுவனம் (Independent Analytics Company) ஆகும்.

Jio + Airtel என 2 சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? அப்போ ஒரு குட் நியூஸ்!

ஓப்பன்சிக்னலின் சமீபத்திய ஆய்வறிக்கையொன்று, ஜியோ சேவையின் கீழ் இருக்கும் பயனர்கள் தான் இந்தியாவிலேயே மிகவும் வேகமான பதிவிறக்க வேகங்களை (Fastest download Speeds in India) அனுபவிக்கிறார்கள் என்கிறது. இந்த முடிவு கடந்த டிசம்பர் 01, 2022 முதல் பிப்ரவரி 28, 2023 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து வந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி ஜியோவின் பதிவிறக்க வேகமானது 22.5 Mbps ஆகவும், ஜியோவின் 5ஜி பதிவிறக்க வேகம் 315.3 Mbps ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் ஜியோ பயனர்களின் சராசரி ஒட்டுமொத்த பதிவிறக்க வேகமானது ஏர்டெல்லை விட 4.5 எம்பிபிஎஸ் வேகமாக உள்ளது; அதாவது ஜியோ, ஏர்டெல்லை விட 24.7% வேகமானதாக இருக்கிறது!

அதே ஓப்பன்சிக்னல் ஆய்வறிக்கையானது ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் இருக்கும் வாடிக்கையாளர்கள் தான் சிறந்த வீடியோ மற்றும் கேமிங் அனுபவத்தையும் (Video அண்ட் Gaming Experience), சிறந்த வாய்ஸ் கால் அனுபவத்தையும் (Best Voice Experience) பெறுகிறார்கள் என்கிற உண்மையை வெளிப்படுத்தி உள்ளது.

அதாவது ஏர்டெல் பயனர்கள் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் (Video Streaming) செய்யும் போதும், ​​மல்டிபிளேயர் மொபைல் கேம்களை (Multi Player Mobile Games) விளையாடும் போதும் மற்றும் இந்தியா முழுவதுமாக வாய்ஸ் கால்களை (Voice Call) நிகழ்த்தும்போதும் ஜியோ பயனர்களை விட சிறந்த அனுபவத்தை பெறுகின்றனர்.

மேலும் இந்த ஓப்பன்சிக்னல் அறிக்கையின்படி, கவரேஜ் (Coverage) என்று வரும்போது ஜியோ தான் வெற்றி பெறுகிறது. ஜியோவின் 4ஜி கவரேஜ் அனுபவம் (4G Coverage Experience) மற்றும் பரந்த அளவிலான 5ஜி (5G Reach) அனுபவம் ஆகிய இரண்டுலுமே ஒப்பீட்டளவில் முதல் இடங்களில் உள்ளன.

ஒட்டுமொத்தமாக ஓப்பன் சிக்னலின் இந்த சமீபத்திய ஆய்வறிக்கையின் வழியாக ஜியோ நிறுவனமானது அட்டகாசமான இன்டர்நெட் ஸ்பீட்டை (Internet Speed) வழங்குகிறது; மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனமானது தரமான வாய்ஸ் கால்களை வழங்குகிறது. ஆக உங்களிடம் இவ்விரு நிறுவனங்களின் சிம் கார்டுகள் இருந்தாலும் சரி அல்லது ஒரு சிம் கார்டு இருந்தாலும் சரி.. எப்படி பார்த்தாலும் உங்களுக்கு இதுவொரு குட் நியூஸ் தான்!

அதெல்லாம் சரி.. ஓப்பன்சிக்னல் ஆய்வறிக்கையில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) பற்றி எந்த வார்த்தையுமே இல்லையா என்று கேட்டால்.. ஓப்பன்சிக்னலின் எந்தவொரு தரநிலையிலுமேபி பிஎஸ்என்எல் வெற்றிபெறவில்லை. மறுகையில் உள்ள வோடபோன் ஐடியாவானது கேமிங் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் அப்லோட் ஸ்பீட் எக்ஸ்பீரியன்ஸில் மற்ற நிறுவனங்களுடனான கூட்டு வெற்றியாளராக உள்ளது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio users experience fastest download speed Airtel gives best voice call OpenSignal report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X