Home
News

மாத்திக்கட்டி ரீசார்ஜ் செய்யப்படும் 2 Jio ரீசார்ஜ்.. அன்லிமிடெட் 5G டேட்டா, இலவச NETFLIX கொடுத்தா யாரு விடுவா!

சாதாரணமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள் வழியாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் (Unlimited 5G Data) சேர்த்து, மிகவும் பிரபலமான ஓடிடி பிளாட்ஃபார்மான நெட்பிளிக்ஸ்-க்கான இலவச சந்தாவையும் (Free Netflix Subscription) கொடுத்தால் யார் தான் விடுவார்கள். போட்டி போட்டுக்கொண்டு தான் ரீசார்ஜ் செய்வார்கள்!

ஜியோவின் பெரும்பாலான திட்டங்களில், ஜியோ வெல்கம் ஆபர் (Jio Welcome Offer) என்கிற பெயரின்கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா அணுக கிடைக்கிறது. இருப்பினும் ப்ரீபெயிட் தொகுப்பில் உள்ள 2 திட்டங்களில் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் சேர்த்து இலவச நெட்பிளிக்ஸ் கிடைக்கிறது.

மாத்திக்கட்டி ரீசார்ஜ் செய்யப்படும் 2 Jio ரீசார்ஜ்!

அதென்ன திட்டங்கள்? நாம் இங்கே பேசுவது ஜியோவின் ரூ.1,099 மற்றும் ரூ.1,499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றித்தான். நன்மைகளை பொறுத்தவரை, ரூ.1,099 ஆனது ஜியோ வெல்கம் ஆஃபரின்கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தா போன்ற நன்மைகளை வழங்குகிறது.

ரூ.1,099 திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களாகும். மறுகையில் உள்ள ரூ.1,499 ப்ரீபெய்ட் திட்டமும் கூட வெல்கம் ஆஃபரின்கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச நெட்பிளிக்ஸ் அடிப்படை சந்தா போன்ற நன்மைகளை வழங்குகிறது. இதுவும் 84 நாட்கள் என்கிற வேலிட்டியுடன் வருகிறது.

நினைவூட்டும் வண்ணம், நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தா திட்டத்தின் விலை ரூ.1,099 ஆகும். இந்த திட்டமானது 480பி ரெசல்யூஷனில் கன்டென்ட்-ஐ ஸ்ட்ரீமிங் செய்ய அனுமதிக்கிறது. அதே நேரத்தில் நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவின் விலை ரூ.1,499 ஆகும். இது எச்டி ரேஸல்யோஷனில் கன்டென்ட்-ஐ ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, இந்தியா முழுவதும் உள்ள அதன் 22 டெலிகாம் வட்டங்களிலும் ஜியோ 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டதால், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் / ஊர்களில் ஜியோ 5ஜியை அறிமுகம் செய்துவிட்டதால்.. மேற்கண்ட 2 ரீசார்ஜ்களையும் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்!

சமீபத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அறிமுகமான ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் (Jio AirFiber Service) கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 4 திட்டங்களிலும் கூட இலவச நெட்பிளிக்ஸ் சந்தா கிடைக்கிறது. அதென்ன திட்டங்கள்? அந்த திட்டங்களின் விலை நிர்ணயம் மற்றும் நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:

ஜியோ ஏர்ஃபைபர் ரூ.1199 திட்டம்: இந்த திட்டம் 550+ டிஜிட்டல் சேனல்களுக்கான இலவச அணுகல் மற்றும் 100எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிட்ட் டேட்டா நெட்பிளிக்ஸ் பேஸிக், ப்ரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா ப்ரீமியம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களும் கிடைக்கும்.

ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் ரூ.1499 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ், 30 நாட்களுக்கு 300எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின்கீழ் அன்லிமிடெட் டேட்டா, 50+ டிஜிட்டல் சேனல்களுக்கான இலவச அணுகல், நெட்பிளிக்ஸ் பேஸிக், ப்ரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலைவ், ஜீ5 மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களும் கிடைக்கும்

ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் ரூ.2499 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ், 30 நாட்களுக்கு 500எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின்கீழ் அன்லிமிடெட் டேட்டா, 50+ டிஜிட்டல் சேனல்களுக்கான இலவச அணுகல், நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட், ப்ரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலைவ், ஜீ5 மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களும் கிடைக்கும்

ஜியோ ஏர்ஃபைபர் மேக்ஸ் ரூ.3999 திட்டம்: இந்த திட்டத்தின் கீழ், 30 நாட்களுக்கு 1ஜிபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின்கீழ் அன்லிமிடெட் டேட்டா, 50+ டிஜிட்டல் சேனல்களுக்கான இலவச அணுகல், நெட்பிளிக்ஸ் பிரீமியம், ப்ரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலைவ், ஜீ5 மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Users Check out These 2 Prepaid Plans Which Offer Unlimited 5G Data And Free Netflix
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X