ஜியோவின் பழைய பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகையை எப்படி மீண்டும் அதே சலுகையுடன் பெறுவது?
ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் பிரீபெயிட் சலுகைகளை முந்தைய விலையிலேயே பயன்படுத்திக்கொள்ளச் சிறப்பு வழிமுறை ஒன்று இருக்கிறது. இந்த முறையைப் பின்பற்றினால் நிச்சயம் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு முந்தைய திட்ட விலையிலேயே ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கும் என்று ஜியோ அறிவித்துள்ளது.

40 சதவீத விலை உயர்வு
அண்மையில் டெலிகாம் நிறுவனங்கள் முன்பு வழங்கி வந்த திட்டங்களின் விலையை 40 சதவீதத்திற்கு உயர்த்தியது.அதனை தொடர்ந்து ஜியோ - ஜியோ வாய்ஸ் கால் அழைப்புகள் மட்டும் இலவசம் என்றும், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஜியோ அறிவித்திருந்தது.

300 சதவீதம் அதிக நன்மை
ஜியோ நிறுவனம் தனது ஜியோ பயனர்களுக்காக புதிய ஆல்-இன்-ஒன் திட்டம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு முன்பைவிட 300 சதவீதம் அதிக நன்மை கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஜியோவின் சூட்சுமம்
தற்பொழுது கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் முன்பு வழங்கப்பட்டுவந்த பழைய சலுகைகளுக்கு இப்பொழுதும் ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆனால் இதில் ஒரு சூட்சமும் உள்ளது. இந்த சூட்சமத்தை சரியாக வழிமுறைப்படி கையாண்டால் பழைய சலுகையுடன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

பழைய ரீசார்ஜ் சலுகை பயன்படுத்தாத பயனரா நீங்கள்?
பழைய ரீசார்ஜ் சலுகையில் இருக்கும் எவ்வித சலுகையையும் அந்த வாடிக்கையாளர் பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே, முன்பு வழங்கப்படச் சலுகைகளுடன் அந்த வாடிக்கையாளர்தற்பொழுது ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். ஜியோவின் முந்தைய சலுகைகளை அனுபவிக்காத பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை இப்பொழுது வழங்கப்படுகிறது.

எப்படி பழைய ரீசார்ஜ் சலுகையைப் பெறுவது?
ஜியோவின் எவ்வித சலுகையும் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள், ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அவர்களின் ஜியோ அக்கௌன்டை லாக்-இன் செய்துகொள்ள வேண்டும். லாக்-இன் செய்த பின், செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள டேரிஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பொருத்தமான சலுகை எது என்று தேர்வு செய்யுங்கள்
தற்பொழுது உங்களுக்கான பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும், பட்டியலிடப்பட்டுள்ள சலுகைகளில்உங்களுக்குப் பொருத்தமான சலுகை எது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதற்குப்பின்உங்களுக்கு பொருத்தமான சலுகைதேர்வைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








