Home
News

Jio பயனர்களுக்கு Amazon Prime, Netflix, Disney+ Hotstar இலவசம்: இனி குஷிதான்!

ஒவ்வொரு சிறந்த திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் தொடர்ச்சியாக வெவ்வேறு ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு ஓடிடிக்கு சந்தா பணம் செலுத்தினால் அடுத்த வாரம் வேறு ஓடிடியில் ஒரு நல்ல படம் வெளியாகிறது. சரி, எல்லாத்துக்கும் பணம் செலுத்த முடிவு செய்தால் அதற்கான கட்டணம் அதிகமாக இருக்கிறது. வேறு வழிதான் என்ன என்று யோசித்தால், அதற்கு தீர்வு இருக்கிறது.

இலவசமாக வழங்கப்படும் ஓடிடி அணுகல்

இலவசமாக வழங்கப்படும் ஓடிடி அணுகல்

அனைத்து ஓடிடியையும் ஒருங்கிணைத்து வழங்கும் தீர்வாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இருக்கிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் ஒன்றுதான் இலவச ஓடிடி அணுகல் சலுகைகள் ஆகும். இதில் முன்னணி ஓடிடி தளங்களின் அணுகலும் இலவசமாக கிடைக்கிறது.

வெவ்வேறு மாதிரியாக ஓடிடி அணுகல்

வெவ்வேறு மாதிரியாக ஓடிடி அணுகல்

ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வெவ்வேறு மாதிரியாக ஓடிடி அணுகலை வழங்குகிறது.

போட்டி என்று வந்துவிட்டால் அதிக வாடிக்கையாளர்களுடன் முன்னணியில் இருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனம் சும்மா இருக்குமா?. அதன்படியான ஒரு அறிவிப்பு தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஓடிடி நன்மைகள்

போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஓடிடி நன்மைகள்

அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி அணுகலையும் ஜியோ இலவசமாக வழங்குகிறது.

ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இந்த இலவச அணுகலை வழங்குகிறது. ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை விட போஸ்ட்பெஸ்ட் திட்டங்களின் விலை சற்று அதிகமாக இருக்கும்.

இருப்பினும் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் நன்மைகள் இந்த திட்டங்களில் வழங்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்டப்படி போஸ்ட்பெய்ட் திட்டங்களில் Netflix, Amazon Prime உள்ளிட்ட பல ப்ரீமியம் பயன்பாடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்

போஸ்ட்பெய்ட் திட்டங்களில் மிகவும் மலிவு விலை திட்டமாக ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

கூடுதலாக வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது.

கூடுதலாக நெட்ஃபிளிக்ஸ் சந்தா சேவையுடன் அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.599 போஸ்ட்பெஸ்ட் திட்டம்

ரூ.599 போஸ்ட்பெஸ்ட் திட்டம்

பட்டியலில் உள்ள அடுத்த ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கையில், அது ரூ.599 போஸ்ட்பெஸ்ட் திட்டமாகும்.

இந்த திட்டத்தில் மொத்தம் 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு வரம்பற்ற குரலழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.

ஓடிடி நன்மைகள் குறித்து பார்க்கையில், இதில் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான இலவச அணுகல் வழங்கப்படுகிறது.

ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்

அதிக டேட்டா நன்மைகளுடன் ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 150 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்கும். முன்னதாகவே குறிப்பிட்டது போல் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகளை ஜியோ வழங்குகிறது.

அதாவது இந்த திட்டத்தில் 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர், குடும்பங்களுக்கான 2 கூடுதல் சிம் கார்ட்கள் வழங்கப்படுகின்றன.

அதேபோல் இந்த திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான இலவச அணுகல் வழங்கப்படுகிறது.

ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்

ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்

பத்தல பத்தல அதிக டேட்டா வேண்டும் என்று கேட்பவராக நீங்கள் இருந்தால், ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம் இருக்கிறது.

இந்த திட்டத்தில் மொத்தம் 200 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் கூடுதலாக 3 சிம் கார்ட் இணைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 500 ஜிபி டேட்டா ரோல் ஓவர் நன்மையும் கிடைக்கிறது.

கூடுதலாக இந்த திட்டத்தில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச அணுகலும் கிடைக்கிறது.

ரூ.1499 ரீசார்ஜ் திட்டம்

ரூ.1499 ரீசார்ஜ் திட்டம்

ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலில் மிகவும் விலை உயர்ந்த திட்டமாக ரூ.1499 திட்டம் இருக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

அதோடு அனைத்து திட்டங்களிலும் வழங்கப்படுவது போல் அன்லிமிடெட் குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது.கூடுதலாக 500 ஜிபி டேட்டா ரோல் ஓவர் சலுகை கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது.

ப்ரீபெய்ட் திட்டப் பயனர்களுக்கான நன்மைகள்

ப்ரீபெய்ட் திட்டப் பயனர்களுக்கான நன்மைகள்

ப்ரீபெய்ட் திட்டப் பயனர்களுக்கு ஒன்றும் இல்லை என கவலைப்பட வேண்டாம். உங்களுக்கும் இருக்கிறது.

ஜியோ பயனர்கள் மொத்தம் 5 போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கீழ் இலவச நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை பெறலாம்.

நெட்ஃபிளிக்ஸ் சந்தா உடன் கூடுதலாக இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களில் Disney+ Hotstar மற்றும் Amazon Prime போன்ற பிற OTT திட்டங்களும் இலவச சந்தாவை வழங்குகின்றன. திட்டங்களின் விலை ரூ.399, ரூ.599, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1499 ஆகும்.

முன்னணி ஓடிடி சந்தா அணுகல்

முன்னணி ஓடிடி சந்தா அணுகல்

ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டமானது 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் ரூ.599 போஸ்ட்பெய்ட் திட்டமானது 100 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டமானது மொத்தம் 150 ஜிபி டேட்டாவையும், ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டமானது மொத்தம் 200 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

இந்த அனைத்து திட்டங்களிலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.

அதோடு Netflix, Disney+ Hotstar மற்றும் Amazon Prime சந்தா அணுகலும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Users can Get Free Subscription For Amazon Prime, Netflix, Disney+ Hotstar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X