Netflix சந்தாவை இலவசமாக தரும் இரண்டு Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்.. என்ன விலை? என்னென்ன நன்மைகள்?
ஜியோ நிறுவனம் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட குறைந்த பட்ஜெட்டில் அதிக நன்மைகள் தரும் திட்டம் ஜியோவிடம் உள்ளது. எனவே தான் அதிக பயனர்கள் ஜியோவில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆரவம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இலவச நெட்பிளிக்ஸ் சந்தா மற்றும் அதிக டேட்டா நன்மையைத் தரும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த இரண்டு திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது (Jio Rs 1799 prepaid plan) நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். அதேபோல் இந்த திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் 3 மாதங்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

குறிப்பாக ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1299 திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் இந்த திட்டமும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை 3 மாதங்களுக்குத் தருகிறது. அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








