ஒரு வழியாக ஸ்பேம் அழைப்புகளை தடுக்க வழிகாட்டிய ஜியோ.. மொபைலில் இதை மட்டும் ஆன் பண்ணுங்க போதும்..
தினமும் ஸ்பேம் (Spam) அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் அதிகரித்து வருகின்றன என்று தான் கூறவேண்டும். இதை தடுக்க டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக சைபர் குற்றவாளிகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஸ்பேம் அழைப்புகளைச் செய்கின்றனர். இந்நிலையில் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க ஜியோ ஒரு எளிய தீர்வை வழங்கியுள்ளது.
அதாவது ஜியோ பயனர்கள் மைஜியோ (MyJio) செயலி மூலம் ஒரே கிளிக் செய்தால் போதும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-களை தடுக்க முடியும். அதேசமயம் ஜியோ பயனர்கள் இதை செய்வதன் மூலம் ஒடிபி மற்றும் நம்பகமான பிராண்டுகளின் முக்கியமான செய்திகள் தொடர்ந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஸ்பேம் அழைப்புகளை மட்டும் முழுமையாகத் தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சில விளம்பர அழைப்புகள் மட்டும் அனுமதிக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்போது ஜியோ பயனர்கள் ஸ்பேம் அழைப்புகளைத் தடுப்பது எப்படி என்று விரிவாகப் பார்க்கலாம்.
ஜியோ பயனர்கள் உங்கள் போனில் மைஜியோ (MyJio) செயலியைத் திறந்து ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தடுக்க Do Not Disturb (DND) சேவையை இயக்க வேண்டும். குறிப்பாக இதன் மூலம் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உடன் சில டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த செட்டிங்ஸ்-இல் பிளாக் செய்ய வேண்டிய அழைப்புகள் மற்றும் மேசேஜ்களின் குறிப்பிட்ட வகையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்கள் DND சேவையை விருப்பப்படி பயன்படுத்தலாம். குறிப்பாக இதில் ரியல் எஸ்டேட், கல்வி, வங்கி, சுகாதாரம், சுற்றுலா என பல ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் முழுமையான ஸ்பேம் தடுப்பை இயக்கினாலும், நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து வரும் போன் கால் மற்றும் எஸ்எம்எஸ்-களை தொடர்ந்து பெறலாம். எனவே வாடிகையாளரகள் முழுமையாக ஸ்பேம் தடுப்பு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக இது அதிக எண்ணிக்கையிலான ஸ்பேம் மற்றும் எஸ்எம்எஸ்களை தடுத்துவிடும்.
ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களில் சலுகைகள் வழங்கி வருகிறது. எனவே தான் மற்ற நிறுவனங்களின் திட்டங்களை விட ஜியோ நிறுவனத்தின் திட்டங்களில் அதிக பயனர்கள் ரீசார்ஜ் செய்கின்றனர்.

மேலும் சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியா (Reliance Jio) நிறுவனம் வால்ட் டிஸ்னி (Walt Disney) உடன் இணைத்து புதிய பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய தளத்தை முகேஷ் அம்பானி ஜியோஸ்டார் (JioStar) என்று பெயரிட்டுள்ளார். இந்த புதிய ஜியோஸ்டார்.காம் (Jiostar.com) என்ற தளத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் ஏர்டெல் நிறுவனமும் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க சில முயற்சிகளைச் செயல்படுத்தி உள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு நெட்வொர்க் அடிப்படையிலான ஏஐ (AI)ஆற்றல் பெற்ற ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகம் செய்தது. குறிப்பாக இது ஏர்டெல் பயனர்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை தடுக்க உதவுகிறது.


Click it and Unblock the Notifications








