மக்களே உஷார்: ஜியோ பெயரில் தகவல் திருட்டுடன் பணத்திருட்டும் செய்யும் ஹேக்கர்கள்!

|

உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஏதாவது ரிலையன்ஸ் ஜியோ தொடர்பாக மெசேஜ் வருகிறதா..? அதுவும் குறிப்பாக ரூ.399 விலையில் மூன்று மாத காலத்திற்கு இலவச ரீசார்ஜ் என்று ஏதாவது மெசேஜ்கள் வந்துள்ளதா? அப்படி வந்திருந்தால் மக்களே உஷார்!

மக்களே உஷார் ஆகிக்கொள்ளுங்கள்

மக்களே உஷார் ஆகிக்கொள்ளுங்கள்

உங்கள் ஸ்மார்ட் போனிற்கு இது போன்ற குறுஞ்செய்திகள் அல்லது ஈமெயில்கள் வந்திருந்தால், மக்களே உஷார் ஆகிக்கொள்ளுங்கள். இலவசமாக உங்களுக்குக் கொடுக்கப்படும் எதுவும் உங்களுக்கு உண்மையில் இலவசமாகக் கொடுக்கப்படவில்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

இலவசத்திற்குப் பின்னால் உள்ள ஆபத்து!

இலவசத்திற்குப் பின்னால் உள்ள ஆபத்து!

உங்களிடம் இருந்து ஏதோ ஒன்றை எடுத்துத் தான், அதை இலவசம் என்ற பெயரில் வழங்குவார்கள். அதேபோல் தான் இந்த இலவச சலுகையும். போலி குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் மூலம் உங்களின் தகவலைத் திருடுவதே இந்த ஹேக்கர்களின் முக்கிய நோக்கம்.

<strong>கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா?</strong>கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா?

தகவல் திருட்டுடன் பணத்திருட்டுமா?

தகவல் திருட்டுடன் பணத்திருட்டுமா?

உங்களின் தனிநபர் விபரங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக உங்கள் தகவலைக் கொண்டு உங்கள் பணத்தை ஹேக்கர்கள் திருடுவார்கள் அல்லது உங்களிடம் இருந்து பணத்தை எந்த வழியில் வாங்கலாம் என்று பார்ப்பார்கள்.

இப்படி தான் அவர்களின் வலையில் சிக்கிக்கொள்கிறீர்கள்!

இப்படி தான் அவர்களின் வலையில் சிக்கிக்கொள்கிறீர்கள்!

இதற்காக வழக்கம் போல் இந்த ஹேக்கர்கள் உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்புவார்கள். இந்த வலையில் தான் நம் மக்கள் மாட்டிக்கொள்கின்றனர். இவர்கள் கொடுக்கும் லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை எல்லாம் கேட்கும். இதுதான் அவர்களுக்கு மூலதனம்.

<strong>குரோம் பயனர்கள் கடவுசொல்லை உடனே மாற்றவேண்டும் : கூகுள் எச்சரிக்கை.!</strong>குரோம் பயனர்கள் கடவுசொல்லை உடனே மாற்றவேண்டும் : கூகுள் எச்சரிக்கை.!

நாம் சிக்கிய அதே வலையில் நம் நண்பர்கள்!

நாம் சிக்கிய அதே வலையில் நம் நண்பர்கள்!

இந்த சலுகையைப் பெற இந்த செய்தியை 10 வாட்ஸ்அப் குழுக்களுக்குப் பகிரச் சொல்லி உங்கள் எண்ணிற்கு மெசேஜ் மற்றும் மின்னஞ்சல் வரும். அதை நம்பி நாம் விழுந்த அதே வலையில் நம்முடைய நண்பர்கள் உள்ள குழு மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள் உள்ள குழுக்களிலும் இந்த செய்தியை நாம் பகிர்ந்து அவர்களையும் வலையில் சிக்க வைத்துவிடுவோம்.

விற்பனை ஆகும் உங்கள் தகவல்கள்!

விற்பனை ஆகும் உங்கள் தகவல்கள்!

இதனால் நமக்கு என்ன நடக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் தவறாகப் பிற இடங்களில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இன்னொன்று உங்களுடைய தகவல்கள் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

<strong>ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.!</strong>ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.!

பணத்தை உங்களிடமிருந்து எப்படிப் பிடுங்குவார்கள்?

பணத்தை உங்களிடமிருந்து எப்படிப் பிடுங்குவார்கள்?

இந்த டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் அடுத்து உங்களிடமிருந்து பணத்தை எப்படி வாங்கலாம் என்று தான் பார்ப்பார்கள். நம்மைத் தொடர்ந்து கிரெடிட் கார்டு வாங்கச் சொல்வது, தனிநபர் கடன் வாங்கச் சொல்வது அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளை வாங்கச் சொல்வது, பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் சொல்வது என நம்மைத் தொடர்ந்து தொந்தரவு செய்வார்கள்.

வங்கிக் கணக்கிலிருந்து பணம் கொள்ளை!

வங்கிக் கணக்கிலிருந்து பணம் கொள்ளை!

இதை விடக் கொடுமை என்னவென்றால் உங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு ஹேக்கர்களால் நம்முடைய வங்கிக் கணக்கை ஹேக் செய்து நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருட முடியும். வங்கிக் கணக்கு எனச் சொல்வதில் நம்முடைய கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் போன்றவையும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

<strong>ஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன? வாங்க பார்ப்போம்.!</strong>ஆண்ட்ராய்டு 10-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன? வாங்க பார்ப்போம்.!

இந்த வலையில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

இந்த வலையில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

உங்கள் எண்ணிற்கு இதுபோன்ற சந்தேகத்திற்குரிய மெசேஜ் அல்லது மின்னஞ்சல் ஏதேனும் வந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள். இதுபோன்ற செய்திகள் உண்மைதானா என்பதை அறிந்துகொள்ள எப்பொழுதும் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத் தளத்திற்குச் சென்று உறுதிப்படுத்த யோசிக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Jio Users Be Alert! Don't fall For These Fake Free Jio Recharge Offers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X