Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
சமூகவலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கைக்கு இணையாக ஓடிடி சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஆஹா தமிழ் என பல ஓடிடி பயன்பாடுகளும் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஓடிடி பயன்பாடுகளை இலவசமாக அணுகுவதற்கும் வழிமுறைகள் இருக்கிறது.

நெட்பிளிக்ஸ் சந்தா அணுகல் இலவசம்
திரைப்படங்கள் திரையரங்கில் வெளியான குறுகிய காலத்திலேயே ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஓடிடி சந்தா அணுகலை குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் இலவசமாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் நெட்ஃபிளிக்ஸ் சந்தா அணுகலை இலவசமாக வழங்குகிறது. ஜியோவை பொறுத்தவரை போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கிறது. அந்த திட்டங்களின் விவரங்களை பார்க்கலாம்.

5 போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கீழ் இந்த இலவசம்
ஜியோ பயனர்கள் மொத்தம் 5 போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கீழ் இலவச நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை பெறலாம். நெட்ஃபிளிக்ஸ் சந்தா உடன் கூடுதலாக இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களில் Disney+ Hotstar மற்றும் Amazon Prime போன்ற பிற OTT திட்டங்களுக்கான இலவச சந்தா அணுகலும் வழங்கப்படுகின்றன. திட்டங்களின் விலை ரூ.399, ரூ.599, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1499 ஆகும்.

ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டமானது 75 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா வரம்பு முடிந்ததும் பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டாவுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. திட்டத்தின் பிற நன்மைகள் குறித்து பார்க்கையில் 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர், வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் ஓடிடி சலுகைகள் குறித்து பார்க்கையில், Netflix, Disney+ Hotstar மற்றும் Amazon Prime அணுகல் இலவமாசக வழங்கப்படுகிறது.

ரூ.599 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.599 போஸ்ட்பெய்ட் திட்டமானது 100 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டேட்டா வரம்பு முடிந்ததும் 1 ஜிபிக்கு ரூ.10 வசூலக்கப்படுகிறது. திட்டத்தின் பிற நன்மைகள் குறித்து பார்க்கையில், 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர், 1 கூடுதல் சிம் கார்ட் இணைப்பு, வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது. திட்டத்தின் ஓடிடி நன்மைகள் குறித்து பார்க்கையில், Netflix, Disney+ Hotstar மற்றும் Amazon Prime சந்தா அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது. இது குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டமாகும்.

ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டமானது மொத்தம் 150 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டேட்டா வரம்பு முடிந்ததும் 1 ஜிபிக்கு ரூ.10 வசூலக்கப்படுகிறது. திட்டத்தின் பிற நன்மைகள் குறித்து பார்க்கையில், 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர், 2 கூடுதல் சிம் கார்ட்கள் இணைப்பு, வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது. திட்டத்தின் ஓடிடி நன்மைகள் குறித்து பார்க்கையில், Netflix, Disney+ Hotstar மற்றும் Amazon Prime சந்தா அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டமானது மொத்தம் 200 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டேட்டா வரம்பு முடிந்ததும் 1 ஜிபிக்கு ரூ.10 வசூலக்கப்படுகிறது. திட்டத்தின் பிற நன்மைகள் குறித்து பார்க்கையில், 500 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர், 3 கூடுதல் சிம் கார்ட்கள் இணைப்பு, வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது. திட்டத்தின் ஓடிடி நன்மைகள் குறித்து பார்க்கையில், Netflix, Disney+ Hotstar மற்றும் Amazon Prime சந்தா அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.1499 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.1499 போஸ்ட்பெய்ட் திட்டமானது 300 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டேட்டா வரம்பு முடிந்ததும் 1 ஜிபிக்கு ரூ.10 வசூலக்கப்படுகிறது. திட்டத்தின் பிற நன்மைகள் குறித்து பார்க்கையில், 500 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர், வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது. திட்டத்தின் ஓடிடி நன்மைகள் குறித்து பார்க்கையில், Netflix, Disney+ Hotstar மற்றும் Amazon Prime சந்தா அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் USA மற்றும் UAE நாடுகளுக்கு இலவச அன்லமிடெட் குரல் அழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது.

போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே சலுகை
Netflix சந்தா அணுகல் ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைமுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications