Airtel-க்கு போட்ட போடு.. 2 வருடத்துக்கு FREE சலுகை.. இனிமேல் Jio கஸ்டமர்கள் இதை பண்ணுங்க.. எந்தெந்த திட்டம்!
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தை தூக்கி சாப்பிடும்படி 2 வருடங்களுக்கான இலவச சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஐந்து திட்டங்களில் கொடுக்கிறது. டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல் ஓடிடி சலுகைகளை கொடுக்கும் இந்த திட்டங்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ஃபைபர் (Jio Fiber) மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) திட்டங்கள் நாடு முழுவதும் கிடைக்கின்றன. ஏர்டெல் நிறுவனத்தின் ஃபைபர் திட்டங்களுக்கு கடும்போட்டியாக இந்த திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களில் டேட்டா, வாய்ஸ் மற்றும் ஓடிடி போன்ற ஒட்டுமொத்த சலுகைகளும் கிடைப்பதால், கஸ்டமர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

இப்போது, ஜியோ நிறுவனம் 2 வருடங்களுக்கான யூடியூப் பிரீமியம் (2 Years Free YouTube Premium) சலுகையை ஐந்து ஜியோ ஃபைபர், ஏர்ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டங்களில் கொடுக்கிறது. ஏற்கனவே, 14+ ஓடிடி ஆப்களை இந்த திட்டங்கள் கொண்டிருக்கின்றன. இந்த சலுகைகளை பார்த்தால், நீங்களே உடனே புக்கிங் செய்துவிடுவீர்கள். முதலில் ஃபைபர் திட்டங்களை பார்ப்போம்.
ஜியோ ரூ 1499 ஃபைபர் திட்டம் (Jio Rs 1499 Fiber Plan): இந்த ஃபைபர் திட்டம் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. 300 எம்பிபிஎஸ் டேட்டா, இலவச வாய்ஸ் கால்கள் மற்றும் 800+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற 14+ ஓடிடிகளுடன் இப்போது 2 வருடங்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தாவும் கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 1199 ஏர்ஃபைபர் திட்டம் (Jio Rs 1199 AirFiber Plan): இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கிறது. மாதத்துக்கு 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 800+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா பிரீமியம் போன்ற 13+ ஓடிடிகளுடன் யூடியூப் பிரீமியம் சந்தா கிடைக்கிறது.
ஜியோ ரூ 1499 ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டம் (Jio Rs 1499 AirFiber Max Plan): இந்த மேக்ஸ் திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். 1000 ஜிபி டேட்டாவை மாதத்துக்கு பயன்படுத்தலாம். 800+ டிவி சேனல்கள் மற்றும் அமேசான் பிரைம், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா பிரீமியம் போன்ற ஓடிடிகள் வருகின்றன. கூடவே, யூடியூப் பிரீமியம் சந்தா கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 2499 ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டம் (Jio Rs 2499 AirFiber Max Plan): இந்த ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டத்தில் 500 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா மற்றும் 800+ டிவி சேனல்கள் கிடைக்கும். வேகம் அதிகமாக இருந்தாலும், 1000 ஜிபி டேட்டாவை மட்டுமே மாதத்துக்கு பயன்படுத்த முடியும். இதிலும் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் பிரீமியம் கிடைக்கிறது.
ஜியோ ரூ 3999 ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டம் (Jio Rs 3999 AirFiber Max Plan): ஏர்ஃபைபர் மேக்ஸ் திட்டங்களில் அதிவேக டேட்டா இதில் கிடைக்கிறது. 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். 800+ டிவி சேனல்கள் மற்றும் 13+ பிரீமியம் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இதிலும் யூடியூப் பிரீமியம் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த யூடியூப் சந்தாவில் என்ன இருக்கிறது?
விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம். பேங்கிரவுண்ட் பிளே ஆப்ஷன் கிடைக்கும். அதேபோல டவுன்லோட் ஆப்ஷன் மற்றும் யூடியூப் மியூசிக் சலுகைகளையும் இதில் பெற்று கொள்ளலாம். ஸ்மார்ட் டிவி மூலம் ஓடிடி கன்டென்ட்களை பார்க்கும் கஸ்டமர்களுக்கு அதிவேக டேட்டாவுடன் இந்த திட்டங்கள் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








