Jio செய்த அதிரடி மாற்றம்! மலிவு விலையில் தாராளமான டேட்டா வழங்கும் வவுச்சர் நன்மைகள்!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அதன் புதிய வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) ஆட்-ஆன் திட்டங்களின் கீழ் சில முக்கிய திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் வழி ஜியோ பயனர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பதைப் பார்க்கலாம். இத்துடன் மலிவு விலையில் கூடுதல் டேட்டா நன்மை வழங்கும் ஜியோவின் 4ஜி டேட்டா வவவுச்சர் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக்

வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த முக்கிய திருத்தும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.251, ரூ.201, மற்றும் ரூ.151 ஆகிய மூன்று வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணத்தினால் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக இந்த திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செல்லுபடி காலம் எவ்வளவு?

முந்தைய செல்லுபடி காலம் எவ்வளவு?

ஜியோ நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ள அறிவிப்பின்படி இனிமேல் இந்த திட்டங்கள் 20 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்துடன் வழங்கும் செல்லுபடி நன்மையை நிறுத்தியுள்ளது. இந்த கூடுதல் டேட்டா பேக்குகள் வழியாக நீங்கள் உங்களிடம் ஏற்கனவே இருக்கும் டேட்டா வரம்பிற்கு மேல் கூடுதலாக சுமார் 50 ஜிபி வரையிலான அதிவேக டேட்டா ஒதுக்கீட்டைச் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?

ஜியோ செய்த அதிரடி மாற்றம்

ஜியோ செய்த அதிரடி மாற்றம்

கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டு, உங்களிடம் ஆக்டிவ் ஆக உள்ள திட்டத்தின் செல்லுபடியின் கீழ் இந்த ஆட் ஆன் பேக்களின் செல்லுபடி ஒற்றுப்போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ தளத்தில் தற்பொழுது கிடைக்கும் புதுப்பிக்கப்பட்ட பட்டியலின் தகவல் படி, ரூ.251, ரூ.201, மற்றும் ரூ.151 ஆகிய மூன்று வொர்க் ஃப்ரம் ஹோம் ப்ரீபெய்ட் ஆட்-ஆன் பேக்ஸ் திட்டங்களும் இனி 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஆட்-ஆன் திட்ட நன்மைகள்

ஜியோ ஆட்-ஆன் திட்ட நன்மைகள்

இந்த புதிய ஜியோ ஆட்-ஆன் திட்ட மாற்றம், குறிப்பாக இந்த திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தில் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளது. இவற்றின் நன்மைகளில் எந்தவித மாற்றமும் நிகழ்த்தப்படவில்லை என்று ஜியோ தனது வலைத்தளத்தில் தெளிவாக குறிப்பிட்டுளள்துஎன்பதும்குறிப்பிடத்தக்கது.

Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?

வெறும் ரூ.251 க்கு 50 ஜிபி வரையிலான டேட்டா நன்மை

வெறும் ரூ.251 க்கு 50 ஜிபி வரையிலான டேட்டா நன்மை

முன்பு போல் ஜியோ வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக் ரூ.251 வழியாக பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல், ரூ.201 வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக் வழியாக 40 ஜிபி டேட்டா நன்மையையும், ரூ.151 வொர்க் ஃப்ரம் ஹோம் ஆட்-ஆன் பேக் வழியாக 30 ஜிபி டேட்டா நன்மையையும் வழங்குகிறது.

ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர்கள்

ஜியோ நிறுவனத்திடம் ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101 என மொத்தம் நான்கு 4ஜி டேட்டா வவுச்சர்களும் உள்ளது. இந்த ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர்கள், ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கான குரல் அழைப்பு நிமிடங்களுடன் சேர்த்துக் கூடுதல் அதிவேக டேட்டா நன்மையும் வழங்குகிறது. உங்களுடைய நடப்பு திட்டத்துடன் இந்த 4ஜி டேட்டா வவுச்சர்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த ஏர்டெல் நிறுவனம்.!மீண்டும் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த ஏர்டெல் நிறுவனம்.!

4ஜி டேட்டா வவுச்சர் பலன்கள்

4ஜி டேட்டா வவுச்சர் பலன்கள்

  • ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர் ரூ.11 திட்டம் - ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கான 75 நிமிட குரல் அழைப்பு மற்றும் அன்லிமிடெட் 800 எம்.பி டேட்டா நன்மை.
  • ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர் ரூ.21 திட்டம் - ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கான 200 நிமிட குரல் அழைப்பு மற்றும் அன்லிமிடெட் 2 ஜிபி கூடுதல் டேட்டா நன்மை.
  • ரூ.51 திட்டம் மற்றும் ரூ.101 திட்டம்

    ரூ.51 திட்டம் மற்றும் ரூ.101 திட்டம்

    • ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர் ரூ.51 திட்டம் - ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கான 500 நிமிட குரல் அழைப்பு மற்றும் அன்லிமிடெட் 6 ஜிபி கூடுதல் டேட்டா நன்மை.
    • ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர் ரூ.101 திட்டம் - ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கான 1000 நிமிட குரல் அழைப்பு மற்றும் அன்லிமிடெட் 12 ஜிபி கூடுதல் டேட்டா நன்மை.
    • ஜியோவின் ரூ.2399 திட்டம்

      ஜியோவின் ரூ.2399 திட்டம்

      ஜியோ சமீபத்தில் நீண்ட கால திட்டமான ரூ.2,399 மதிப்பிலான ஒரு ஆண்டு கால ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை ஒட்டுமொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. நீண்டநாள் திட்டங்களை விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தைக் கருத்தில்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Updates On Work From Home Plans And Know Details About 4G Data Vouchers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X