Jio இலவச ஆஃபர்.. 90 நாட்கள் சலுகை.. பழையபடி அம்பானி.. ஆனால், ஒரு முறை மட்டும் வருது.. உடனே இதை பண்ணுங்க!
இலவச சலுகைகளை கொடுத்து ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் தட்டித்தூக்கிய ஜியோ (Jio) நிறுவனமானது, அதே யுக்தியை இப்போது மீண்டும் பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. 90 நாட்களுக்கு இலவச சலுகையை கொடுத்து கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. ஆனால், இந்த சலுகையை ஒரு முறை மட்டுமே கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும். அதன் பிறகு கிடைக்காது. ஆகவே, இந்த ஜியோ அன்லிமிடெட் ஆஃபரை (Jio Unlimited Offer) எப்படி பெறுவது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் ஜியோசினிமா (JioCinema) ஆகிய ஓடிடி ஆப்கள் இணைக்கப்பட்டு, ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடியாக மாறியது. அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிகளும் தொடங்கியது. இதை பயன்படுத்திக்கொண்ட ஜியோ நிறுவனம், ரூ.299 மதிப்பிலான ஜியோ திட்டம் அல்லது அதற்கு மேலான திட்டங்களில் இலவச ஜியோஹாட்ஸ்டார் கொடுத்தது.

90 நாட்களுக்கு இலவசமாக அதன் சந்தா கிடைத்தது. மார்ச் 17ஆம் தேதி இந்த ஜியோ அன்லிமிடெட் ஆஃபர் தொடங்கப்பட்டது. ஆகவே, ஐபிஎல் போட்டிகள் முடியும் வரையில் மட்டுமே கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி நேற்று முடிந்துவிட்டது. இருப்பினும், இந்த ஜியோ அன்லிமிடெட் ஆஃபர் தொடர்ந்து கிடைக்கிறது.
இதனால், ஜியோ கஸ்டமர்கள் குஷியில் இருக்கின்றனர். ஜியோ ரூ.299 திட்டம் அல்லது அதற்கு மேல் விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், 90 நாட்கள் சந்தா கொண்ட ஜியோஹாட்ஸ்டார் மொபைல் ஓடிடி கொடுக்கப்படுகிறது. ஆனால், இதுவொரு ஒன் டைம் ஆஃபராகும். ஆகவே, ஒரு முறை பெற்ற பிறகு மீண்டும் பெற முடியாது. இப்போது திட்டங்களை பார்க்கலாம்.
ஜியோ ரூ 299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டியும், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடிக்கு 90 நாட்கள் சந்தாவும் கிடைக்கிறது. ஆகவே, திட்டத்தின் ரீசார்ஜ் முடிந்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஓடிடி சந்தாவை முழுவதும பயன்படுத்த முடியும். இல்லையென்றால், அது காலாவதியாகிவிடும்.
அதேபோல மொபைல் சந்தா மட்டுமே கிடைக்கும். இந்த ஓடிடி சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வருகிறது. இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்காது, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படுகிறது.
இந்த நாளொன்றுக்கு கிடைக்கும் டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி (JioTV) சந்தா கிடைக்கிறது. மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா மூலம் 50 ஜிபிக்கான இலவச கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதற்கு மேல் விலை கொண்ட திட்டங்களிலும் ஓடிடி சலுகை வருகிறது.
இதேபோல ஜியோ போஸ்ட்பெய்ட் (Jio Postpaid) திட்டங்களுக்கும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த இலவச சலுகை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம். ஆகவே, ஜியோ கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யும்போது, ஓடிடி சந்தாவும் வேண்டுமானால், ரூ.299 அல்லது அதற்கு மேல் விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு செல்லலாம்.
ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், ரூ.100 முதல் கிடைக்கிறது. டேட்டா சலுகையுடன் இந்த திட்டம் ஜியோவில் கிடைக்கிறது. ஆகவே, 5 ஜிபி டேட்டா, 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கும். அதுவே, ரூ.299 திட்டத்தில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், தினசரி டேட்டாவுடன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








