ஆஹா அம்பானி.. 5 திட்டத்துல 5ஜி.. ரூ.500-க்குள்ள வாய்ஸ்.. டேட்டா.. ஓடிடி.. இதை மிஸ் பண்ணாதீங்க!
ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர்கள் மிஸ் பண்ண கூடாத 5 ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை விரும்பும் கஸ்டமர்களுக்கு ரூ.500 பட்ஜெட்டில் கிடைக்கும் திட்டங்களாக இவை இருக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) விலை மற்றும் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 198 திட்டம் (Jio Rs 198 Plan): ரிலையன்ஸ் ஜியோவில் இந்த திட்டம் மட்டுமே அடிமட்ட விலைக்கு கிடைக்கும் 5ஜி திட்டமாக இருக்கிறது. மிகவும் குறைவான விலைக்கு கிடைப்பதால், இதில் 14 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த 14 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

ஆகவே, இந்த மலிவு விலை 5ஜி திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஜியோ ஆப்கள் வருகின்றன. இதில் ஜியோ டிவி (Jio TV), ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகை கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 349 திட்டம் (Jio Rs 349 Plan): இந்த ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் முந்தைய திட்டத்தில் பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.
மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சலுகை வருகிறது. இதுபோக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தா 90 நாட்களுக்கு கிடைப்பதால், திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி முந்தவுடன் உடனடியாக அடுத்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அப்போதுதான் சலுகை கிடைக்கும்.
ஜியோ ரூ 399 திட்டம் (Jio Rs 399 Plan): இந்த திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் கிடைக்காது. இருப்பினும், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா வருகிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சந்தா வருகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது.
ஜியோ ரூ 445 திட்டம் (Jio Rs 445 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், 10-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இதில் சோனிலிவ் மற்றும் ஜீ5 இருக்கிறது.
மேலும், லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரிபிளஸ், சன்நெக்ஸ்ட், கான்ச்சா லங்கா, பிளாட் மராத்தி, சாவ்பால், ஹோய்சோய், பேன் கோட், டிவி டிவி போன்ற சலுகைகள் கிடைக்கிறது. மேலும், ஜியோ ஏஐ கிளவுட் சந்தா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது. இந்த ஹாட்ஸ்டார் சந்தா மட்டும் லிமிடெட் சலுகையாக கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 449 திட்டம் (Jio Rs 449 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் டேட்டா கிடைக்கிறது. இதில் உங்களுக்கான திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








