Home
News

Jio காட்டில் மழை.. ரீசார்ஜ் மேல ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள்.. 3 ஜிபி டேட்டா திட்டத்துக்கு வந்த கிராக்கி!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு இதைவிட என்ன வேண்டும்.. என்று கேட்கும்படியான டேட்டா சலுகைகள், ஏஐ சந்தாக்கள், ஓடிடி ஆப்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சலுகைகளுடன் மூன்று மாத திட்டம் ஒன்று கிடைக்கிறது. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுடன் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படும் திட்டமாக இருக்கிறது.

ஜியோ ரூ.1199 திட்ட விவரங்கள் (Jio Rs 1199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இது 4ஜி வேகத்தில் கிடைக்கும் டேட்டாவாக இருக்கிறது. ஆகவே, 5ஜி கஸ்டமர்களாக இல்லாமலேயே வேலிடிட்டி முழுவதும் 252 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.

Jio காட்டில் மழை.. ரீசார்ஜ் மேல ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள்!

ஆகவே, 3 ஜிபி டேட்டா முடிந்த பிறகு டேட்டா வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். ஆனால், அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கும். ஒருவேளை 5ஜி ஸ்மார்ட்போனை வைத்திருந்தால், 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்தி கொள்ளலாம். எப்படி பார்த்தாலும், அதிக டேட்டா சலுகைகளை கொடுத்து இருக்கிறது.

மேலும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஹாலிவுட் மூவிக்கள் மற்றும் சீரிஸ் விரும்பிகளுக்காக 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

இதை ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆப்பில் லாகின் செய்து பயன்படுத்தலாம். இதற்கு ரீசார்ஜ் செய்த ஜியோ மொபைல் நம்பரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கு அடுத்து அதேபோல் ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். நானோ பனானா கிடைக்கும்.

5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இந்த சந்தாவை தொடர்ந்து பெற அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை 18 மாதங்கள் முழுவதும் ஆக்டிவில் வைக்க வேண்டும். ஆகவே, குறைந்தபட்சம் ரூ.349 திட்டம் அல்லது அதற்கு மேல் விலை கொண்ட அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்து வைக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடிந்தவுடன் அதை செய்ய வேண்டும். இதைவிட கம்மியான விலைக்கு தினசரிக்கு 3 ஜிபி டேட்டா கொண்ட திட்டம் வேண்டுமானால், ரூ.449 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இதிலும், 4ஜி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஓடிடி மற்றும் ஏஐ சந்தாக்களும் கிடைக்கின்றன.

ஜியோ ரூ.449 திட்ட விவரங்கள் (Jio Rs 449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைப்பதால், மொத்தமாக 84 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 3 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா இந்த திட்டத்துக்கும் கிடைக்கும்.

மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவுக்கு இவற்றை பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Jio Unlimited 5G AI OTT Subscription Voice Calls 3GB Daily Data Plan At Rs 1199
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X