Home
News

முழுசா 56 நாள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி வழங்கும் Jio.. என்ன விலை?

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வரும் பட்ஜெட் விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரண்டு திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 579 prepaid plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.579 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கொடுக்கப்படுகிறது.

முழுசா 56 நாள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. அள்ளி வழங்கும் Jio!

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.

ஜியோ நிறுவனத்தின் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.629 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். அதேபோல் நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தா வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்கள் ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

அதன்படி ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும்.அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்.

முழுசா 56 நாள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. அள்ளி வழங்கும் Jio!

குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்தஅன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Two prepaid plans offer 56 days validity and unlimited offers: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X