கேபிள் டிவிக்கு குட்பை.. Smart TV-க்கான Jio TV Plus சேவை.. 800 சேனல், 13 OTT இலவசம்.. எந்தெந்த திட்டங்களில்?
Jio TV Plus App: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது ஸ்மார்ட் டிவிகளுக்கான ஜியோ டிவி பிளஸ் ஆப்பை (Jio TV Plus App) அறிமுகம் செய்து உள்ளது. கூடவே இந்த புதிய சேவைக்கான 2-இன்-1 ஆபரையும் (2-in-1 offer) அறிவித்துள்ளது. ஜியோ டிவி பிளஸ் ஆப்பின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதன்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 2-இன்-1 ஆபரில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? எந்தெந்த திட்டங்களின் கீழ் ஜியோ டிவி பிளஸ் சேவை அணுக கிடைக்கும்? இதோ விவரங்கள்:
ஜியோ டிவி பிளஸ் ஆப் இலவசமா அல்லது கட்டணமா? ஜியோ டிவி பிளஸ் ஆப் ஆனது இப்போது அனைத்து முன்னணி ஸ்மார்ட் டிவிகளிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. ஜியோ டிவி பிளஸ் ஆப்பில் உள்ள கன்டென்ட் டை அணுக எஸ்டிபி (STB) எதுவும் தேவையில்லை. ஏனென்றால்.. ஜியோ டிவி பிளஸ் ஆப் என்பது ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் ஒரு கூடுதல் சேவையாகும்.

இதற்காக கூடுதல் கட்டணங்களும் இருக்காது. இதுவரை ஜியோ எஸ்டிபி (Jio STB) மூலம் மட்டுமே கிடைத்த ஜியோ டிவி பிளஸ் ஆப் ஆனது இப்போது அனைத்து முன்னணி ஸ்மார்ட் டிவி ஓஎஸ்-களிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்யப்படும். 2-இன்-1 ஆபரை பொறுத்தவரை, ஒரே ஜியோ ஏர்ஃபைபர் இணைப்புடன் இரண்டு டிவிகளை இணைக்க முடியும்.
ஜியோ டிவி பிளஸ் ஆப்பின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதன்கீழ் 800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள் அணுக கிடைக்கும். பொழுதுபோக்கு பிரிவில் - கலர்ஸ் டிவி, ஈடிவி, சோனி எஸ்ஏபி, ஸ்டார் பிளஸ், ஜீ டிவி. நியூஸ் பிரிவில் - ஆஜ் தக், இந்தியா டிவி, டிவி9 பாரத்வர்ஷ், ஏபிபி நியூஸ், நியூஸ்18. ஸ்போர்ட்ஸ் பிரிவில் - சோனி டென், ஸ்போர்ட்ஸ்18, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், யூரோஸ்போர்ட், டிடி ஸ்போர்ட்ஸ்
ம்யூசிக் பிரிவில் - B4U இசை, 9XM, MTV, ஜூம். கிட்ஸ் பிரிவில் - போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், நிக் ஜூனியர், டிஸ்கவரி கிட்ஸ். பிஸ்னஸ் பிரிவில் - ஜீ பிஸ்னஸ், CNBC TV18, ET Now, CNBC ஆவாஸ். டிவோஷனல் பிரிவில் - ஆஸ்தா, பக்தி டிவி, பிடிசி சிம்ரன், சன்ஸ்கார் உட்பட 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் அணுக கிடைக்கும்.
டிவி சேனல்களுடன் சேர்த்து ஜியோ டிவி பிளஸ் ஆப்பின் கீழ் 13 ஓடிடி ஆப்களுக்கான அணுகல்களும் கிடைக்கும்: ஜியோ சினிமா பிரீமியம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லைவ் , ஜீ 5, சன் நெக்ஸ்ட், ஹொய்ச்சொய், டிஸ்கவரி பிளஸ், லயன்ஸ் கேட் பிளே, பேன்கோட், இடிவி வின், ஷீமாரோமீ, ஈரோஸ் நவ், ஆல்ட் பாலாஜி.
எந்தெந்த திட்டங்களின் கீழ் ஜியோ டிவி பிளஸ் ஆப் நன்மைகள் அணுக கிடைக்கும்? ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) சேவையின் கீழ் கிடைக்கும் அனைத்து திட்டங்களும், ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் பிரிவின் கீழ் உள்ள ரூ. 599, ரூ. 899 மற்றும் அதற்கு மேலான திட்டங்களிலும் மற்றும் ஜியோஃபைபர் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் உள்ள ரூ 999 மற்றும் அதற்கு மேலான திட்டங்களிலும் அணுக கிடைக்கும்
ஜியோ டிவி பிளஸ் ஆப்பின் முக்கிய அம்சங்கள்: சிங்கிள் லாக்இன்-ல் ஜியோ டிவி பிளஸ் ஆப்பில் உள்ள முழு கன்டென்ட்டிற்கான பட்டியலையும் அணுகலாம். ஜியோடிவி+ கன்டென்ட் மற்றும் அம்சங்கள் அனைத்தும் ஸ்மார்ட் டிவி ரிமோட்டை பயன்படுத்தி அணுகலாம். இதுதவிர்த்து கண்ட்ரோல் பிளேபேக் ஸ்பீட், கேட்ச்-அப் டிவி, பெர்சனலைஸ்டு ரெக்கமண்டேஷன், கிட்ஸ் சேப் செக்ஷன் போன்ற அம்சங்களும் அணுக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








