இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
ஜியோ (Jio) நிறுவனம் அதன் ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) சேவையை இந்தியாவில் பரவலாக விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது இந்தியாவில் பல முக்கியமான நகரங்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவை கிடைக்கிறது.
இதனை தொடர்ந்து, நிறுவனம் தனது ட்ரூ 5ஜி சேவையை இப்போது இன்னும் 34 நகரங்களில் களமிறங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டின் (Tamil Nadu) சில முக்கியமான நகரங்களும் இடம்பெற்றுள்ளது என்பது குட் நியூஸ். உங்களுக்கான மற்றொரு குட் நியூஸும் உள்ளது தமிழர்களே.!

தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிகளில் Jio 5G பயன்படுத்த கிடைக்கிறது?
இதில் மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள ஜியோ பயனர்களுக்கு இப்போது 5ஜி இலவசமாக பயன்படுத்தக் கிடைக்கிறது. சரி, இப்போது இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிகளில் (Tamil Nadu Jio True 5G Cities) இலவசமாகப் பயன்படுத்தக் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். இத்துடன், இலவசமாக 5ஜி சேவையை அன்லிமிடெட் ஆக பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 5ஜி பீட்டா சோதனையைத் துவங்கி 120 நாட்கள் ஆகிறது. இப்போது வரை, ஜியோ மொத்தம் 225 நகரங்களில் 5ஜி (5G) சேவையை வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் நிறுவனம் இப்போது புதிதாக 34 நகரங்களைச் சேர்த்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் சில நகரங்களும் இடம்பெற்றுள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்ட தமிழ்நாட்டின் நகரங்கள் எது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
ஜியோ 5G நெட்வொர்க் இப்போது ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் கிடைக்கிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனந்தபுரம், பீமாவரம், சிராலா, குண்டக்கல், நந்தியால் மற்றும் தெனாலி ஆகிய இடங்களில் Jio True 5G கிடைக்கிறது. அஸ்ஸாமில், இது திப்ருகர், ஜோர்ஹாட் மற்றும் தேஜ்பூர் முழுவதும் Jio 5G கிடைக்கிறது.

புதிதாக 34 நகரங்களை 5ஜி பட்டியலில் சேர்த்துள்ளதா ஜியோ?
பீகார் , கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு நகரத்தை மட்டுமே ஜியோ தனது 5ஜி வட்டத்தின் கீழ் சேர்த்துள்ளது. பீகாரில் கயா, கர்நாடகாவின் சித்ரதுர்கா, உத்தரப்பிரதேசத்தில் மதுரா மற்றும் ராஜஸ்தானில் அஜ்மீர் ஆகிய நகரங்களில் இப்போது ஜியோவின் 5G சேவை கிடைக்கின்றன.
மகாராஷ்டிராவில், ஜல்கான் மற்றும் லத்தூரில் 5ஜி சேவை இப்போது பயன்படுத்தக் கிடைக்கின்றது. ஒடிசாவில் உள்ள பலங்கிர் மற்றும் நால்கோவில் இப்போது ஜியோ 5ஜி இணைப்பு உள்ளது. அண்டை மாநிலமான தெலுங்கானா, அடிலாபாத் மற்றும் மகபூப்நகர் ஆகிய இடங்களுக்கும் ஜியோ 5ஜி இப்போது விரிவடைந்துள்ளது.
பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மற்றும் பக்வாரா நகரங்களிலும் Jio True 5G சேவை கிடைக்கிறது. இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நகரங்களை ஜியோ தேர்வு செய்து, அதன் 5ஜி சேவையை இந்த நகரங்களில் விரிவுபடுத்தியுள்ளது.

உங்கள் ஊர் இந்த Jio True 5G பட்டியலில் உள்ளதா? உடனே செக் செய்யுங்கள்.!
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, கடலூர் (Cuddalore), திண்டுக்கல் (Dindigul), காஞ்சிபுரம் (Kancheepuram), கரூர் (Karur), கும்பகோணம் (Kumbakonam), நாகர்கோவில் (Nagercoil), தஞ்சாவூர் (Thanjavur) மற்றும் திருவண்ணாமலை (Tiruvannamalai) ஆகிய இடங்களில் இப்போது இந்த ஜியோ 5ஜி சேவை கிடைக்கின்றது. இந்த நகரங்களில் உள்ள அனைத்து ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) பயனர்களும் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரை (Welcome Offer) செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகையின் மூலம், ஜியோ பயனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வரம்பற்ற 5G டேட்டா இலவசமாக வழங்கப்படும். ஜியோவின் திட்டப்படி, 2023 டிசம்பருக்குள், இந்தியா முழுக்க 5G வெளியீட்டை முடிக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஜியோவின் 5G நெட்வொர்க் 1 Gbps + வேகம் வரை வழங்குகிறது. ஜியோவின் பட்டியலில் சேர்க்கப்பட்ட 34 புதிய நகரங்களின் பட்டியல் இதோ.
- அனந்தபுரம், ஆந்திரப் பிரதேசம்
- பீமாவரம்
- சிராலா
- குண்டக்கல்
- நந்தியால்
- தெனாலி
- திப்ருகர், அசாம்
- ஜோர்ஹட்
- தேஜ்பூர்
- கயா, பீகார்
- அம்பிகாபூர், சத்தீஸ்கர்
- தாம்தாரி
- தானேசர், ஹரியானா
- யமுனா நகர்
- சித்ரதுர்கா
- ஜல்கான்
- சோம்பேறி
- பலங்கிர், ஒடிசா
- நால்கோ
- ஜலந்தர், பஞ்சாப்
- பக்வாரா
- அஜ்மீர், ராஜஸ்தான்
- கடலூர், தமிழ்நாடு
- திண்டுக்கல்
- காஞ்சிபுரம்
- கரூர்
- கும்பகோணம்
- நாகர்கோயில்
- தஞ்சாவூர்
- திருவண்ணாமலை
- அடிலாபாத், தெலுங்கானா
- மகபூப்நகர்
- ராமகுண்டம்
- மதுரா, உத்தரபிரதேசம்
இதற்கு முன் தமிழ்நாட்டில் - மதுரை (Madurai), கோவை (Coimbatore), திருச்சி (Thrichy), சேலம் (Salem), ஓசூர் (Hosur), வேலூர் (Vellore) ஆகிய நகரங்களில் Jio 5G அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications