சோதனை முயற்சியாக அறிமுகமாகும் ரிலையன்ஸ் ஜியோவின் டிரிபிள் பிளான்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தற்போது டிரிபிள் பிளே என்ற புதிய பிளான் ஒன்ரை ஜியோ ஜிகாஃபைபருக்காக வழங்கவுள்ளது
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தற்போது டிரிபிள் பிளே என்ற புதிய பிளான் ஒன்ரை ஜியோ ஜிகாஃபைபருக்காக வழங்கவுள்ளது. இந்த பிளானில் ஜியோ ஜிகாஃபைபர், ஜியோ ஹோம் டிவி மற்றும் ஜியோ ஆப்ஸ் என மூன்றையும் ஒரே சிங்கிள் பேக்கேஜில் பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த திட்டத்தை இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டும் செயல்படுத்த திட்டமிட்டிருந்தாலும், தற்போது ஜியோவில் எந்த ஒரு பிளானில் இருப்பவர்களுக்கும் விரைவில் இந்த பிளானை பயன்படுத்தும் வகையில் விரைவில் அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வட்டாரத்தில் இதுகுறித்து மேலும் கூடுதல் தகவல் பெற்ற போது முதலில் இந்த டிரிபிள் பிளானை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களிடத்தில் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்ய உள்ளதாகவும், பின்னர் ஜிகாஃபைபரை பயன்படுத்தும் அவர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொருத்து பின் பொதுமக்களிடம் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிங்கிள் டிரிபிள் பிளான் திட்டத்தில் ஒரே சிங்கிள் கட்டணத்தில் 28 நாட்கள் பயன்படுத்தி கொள்ளாலாம். இந்த பிளானில் எல்லையில்லா வாய்ஸ் கால், 100 ஜிபி வரை இண்டர்நெட் டேட்டா மற்றும் ஜியோ ஹோம் டிவியை பயன்படுத்தும் வசதியை பெற்று கொள்ளலாம். அதுமட்டுமின்றி கூடுதல் சலுகையாக ஜியோ செயலியையும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தற்போதைய சோதனை முயற்சிக்காக இந்நிறுவனம் எந்தவொரு கட்டணத்தையும் பெறாமல் வழங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த டிரிபிள் பிளான் திட்டத்தில் உள்ள முக்கிய அம்சம் ஜியோ ஹோம் டிவி சேவைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தில் ரிலையன்ஸ் ஜியோ மூலம் ஜிகா டிவி சேவையையும் ஜியோ ஹோம் டிவி சேவையையும் அளிக்க உள்ளது. இப்போதைக்கு ஜிகாஃபைபர் ஒருசில முக்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இருந்தாலும் விரைவில் அனைவருக்கும் இந்த சேவை கிடைக்கும் என ரிலையன்ஸ் உறுதி கூறியுள்ளது. தற்போதைக்கு சோதனை முயற்சியாக தங்களுடைய ஊழியர்களிடம் அறிமுகம் செய்யும் இந்த சேவை வெகு சில நாட்களில் அனைத்து தரப்பினர்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ரெகுலர் ஜியோ ஜிகாஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு இந்த டிரிபிள் பிளான் திட்டம் பொருந்துமா? என்பதையும், ஜிகாஃபைபர் வசதி அவர்களுக்கு விரிவுபடுத்தப்படுமா? என்பது குறித்தும் ரிலையன்ஸ் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே இந்த பிளான் குறித்த இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அதன்பின்னரே இந்த திட்டத்தின் முழு விபரங்கள் தெரிய வரும் என்றும், அதுகுறித்த அறிவிப்பு வந்தவுடன் விரிவாக பார்ப்போம்


Click it and Unblock the Notifications