ஜியோவை தூக்கிப்போட்டுட்டு வேற சிம் வாங்க போறீங்களா.? முதலில் இதைப் படிங்க.!

    "வாங்கடா வாங்க.! கிரீஸ் டப்பாவ எப்பிடிமிதிச்ச.?" என்ற நிலைப்பாட்டில் 'இருந்த' பெரும்பாலான ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் இந்தியா போன்ற டெலிகாம் நிறுவனங்களின் "முன்னாள்" வெறுப்பாளர்களுக்கும், வர வர ஜியோ நெட்வார்ட் சரியே இல்ல.. பேசாமல் பழையபடி ஏர்டெல் அல்லது ஐடியாவிற்கே மாறிடலாம் போல என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் திடீர் பிரியர்களுக்கும் வணக்கம்.!

    ஜியோவை தூக்கிப்போட்டுட்டு வேற சிம் வாங்க போறீங்களா.? இதைப் படிங்க.!

    முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவை பிடிக்காமல் போய், வேறொரு டெலிகாம் நிறுவனத்தின் சேவைக்குள் குதிப்பதற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறீர்களா.? அதற்கு முன்னர் சமீபத்திய டிராய் அறிக்கையை ஒருமுறை படித்து விடவும். பின்னர் ஜியோவை விட்டு ஏன் வெளியேறவே கூடாதென்பதற்கான பல காரணங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடம்

    டிராய் (Telecom Regulatory Authority of India - Trai) நடத்திய நவம்பர் மாத 4ஜி மொபைல் தரவு வேக சோதனையில் நாட்டின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

    வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது

    கடந்த 2017 நவம்பர் மாதத்தில், ஜியோவின் மொபைல் தரவு வேகம் (பதிவிறக்கம்) ஆனது 25.6 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இது 2017 ஆண்டு காலண்டரில் அதிகபட்ச வேகமாகும் என்பதையும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. ஜியோவின் முந்தைய டேட்டா வேகப்பதிவுகளுடன் ஒப்பிடும் போது வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது.

    2017-ஆம் ஆண்டு

    இதற்கு முந்தைய தரவு வேகங்களை பொறுத்தமட்டில், அதாவது 2017-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 17.4 எம்பிபிஎஸ், 16.5 எம்பிபிஎஸ், 18.5 எம்பிபிஎஸ், 19.1 எம்பிபிஎஸ், 18.8 எம்பிபிஎஸ், 18.7 எம்பிபிஎஸ், 18.4 எம்பிபிஎஸ், 18.4 எம்பிபிஎஸ், 21.9 எம்பிபிஎஸ் மற்றும் 21.8 எம்பிபிஎஸ் என பதிவாகியுள்ளது.

    பார்தி ஏர்டெல்

    மறுகையில் உள்ள ஜியோவின் பிரதான போட்டியாளரான பார்தி ஏர்டெல் நிறுவனமானது 9.8 எம்பிபிஎஸ் என்கிற அளவிலான வேகத்தை பதிவு செய்துள்ளது. ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் ஏர்டெல் மூலம் பதிவாகியுள்ள மிகச்சிறந்த செயல்திறன் இதுவாகும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், ஏர்டெல் ஆனது முறையே 7.5 எம்பிபிஎஸ் மற்றும் 9.3 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்தது.

    வோடபோன் இந்தியா

    வோடபோன் இந்தியா நிறுவனமானதும் ஏர்டெல் நிறுவனத்தை பின்பற்றியது. நவம்பர் மாதம் அதன் செயல்திறனானது 10 எம்பிபிஎஸ் என்கிற புள்ளியை தொட்டது. அதற்கு முன்னர் அதாவது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 8.7எம்பிபிஎஸ் மற்றும் 9.9எம்பிபிஎஸ் என்கிற வேகத்தை பதிவு செய்தது.

    ஐடியா செல்லுலார்

    இறுதியாக, ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் செயல்திறன் ஏமாற்றமளிக்கிறது என்றே கூறலாம். அதன் மொபைல் தரவு வேகம் ஏப்ரல் முதல் தொடர்ந்து சீர்குலைந்த வண்ணம் உள்ளது. இது நவம்பர் மாதத்தில் 7 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டின் மிக குறைவான வேகமாகும்.

    பின்னோக்கி பயணிப்பதை அறிய முடிகிறது

    ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஐடியா நிறுவனமானது 13.7எம்பிபிஎஸ், 11.7எம்பிபிஎஸ், 9.5 எம்பிபிஎஸ், 8.9 எம்பிபிஎஸ், 8.8 எம்பிபிஎஸ், 8.6 எம்பிபிஎஸ் மற்றும் 8.1 எம்பிபிஎஸ் என்று பதிவாகியது. ஆக ஐடியா செல்லுலார் நிறுவனமானது பின்னோக்கி பயணிப்பதை அறிய முடிகிறது.

    ஜியோ அதிரடி: 8 திட்டங்கள் மீது நம்பமுடியாத விலைகுறைப்பு & 50% கூடுதல் டேட்டா.!

    முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது மற்றொரு புத்தாண்டு பரிசை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஒரு ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவின் மதிப்பை ரூ.4/-க்கு கொண்டுவந்துள்ளது.

    இந்த அறிவிப்பு பார்தி ஏர்டெல், வோடாபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற இதர டெலிகாம் நிறுவனங்களுக்கு எம்மாதிரியான நெருக்கடிகளை வழங்குமென்பதும் ஒருபக்கமிருக்க, ஜியோ திருத்தி (கிட்டத்தட்ட புதிதாக) அறிவித்துள்ள திட்டங்களின் நன்மைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் ஆகிய விவரங்களை முதலில் காண்போம்.

    மொத்தம் 8 திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது

    'ஹேப்பி நியூ இயர் 2018' திட்டத்தின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ அதன் கட்டண திட்டங்களின் விலையை குறைத்தும், நன்மைகளை அதிகரித்தும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் நாள் ஒன்றிக்கு 1ஜிபி வழங்கும் 4 திட்டங்களும், மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி வழங்கும் 4 திட்டங்களுமென மொத்தம் 8 திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது.

    தற்போது ரூ.149/-க்கு கிடைக்கும் ரூ.199/-க்கு

    கிடைத்த திட்டமானது தற்போது ரூ.149/-க்கு கிடைக்கும். மொத்தம் 28ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

    தற்போது ரூ.349/-க்கு கிடைக்கும்

    ரூ.399/-க்கு கிடைத்த திட்டமானது தற்போது ரூ.349/-க்கு கிடைக்கும். மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

    தற்போது ரூ.399/-க்கு கிடைக்கும்

    ரூ.459/-க்கு கிடைத்த திட்டமானது தற்போது ரூ.399/-க்கு கிடைக்கும். மொத்தம் 84ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

    தற்போது ரூ.449/-க்கு கிடைக்கும்

    ரூ.499/-க்கு கிடைத்த திட்டமானது தற்போது ரூ.449/-க்கு கிடைக்கும். மொத்தம் 91ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 91 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    Jio tops TRAI’s mobile data speed test in November. Read more about this in Tamil GizBot. Read more about this in Tamil GizBot.
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more