4G வேகம்: Airtel, Jio, Vi: யாரு டாப்பு? சொதப்பியது யாரு? ட்ராய் தகவல்.!

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் 5ஜி சேவையை தற்போது சில நகரங்களில் கொண்டுவந்துள்ளது. கூடிய விரைவில் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது இநநிறுவனம்.

பதிவேற்றம், பதிவிறக்கம்

இந்நிலையில் 4ஜி தொழில்நுட்பத்தில் இணையதள பதிவேற்றம், பதிவிறக்கம் ஆகிய இரண்டின் வேகத்திலும் ஜியோ நிறுவனம் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

உங்க Smart TV-ல அமேசான் பிரைம் பயன்படுத்துவது எப்படி? பெரிய ஸ்கிரீனில் பிரைம் யூஸ் பண்ணுங்க.!உங்க Smart TV-ல அமேசான் பிரைம் பயன்படுத்துவது எப்படி? பெரிய ஸ்கிரீனில் பிரைம் யூஸ் பண்ணுங்க.!

ட்ராய் வெளியிட்ட தகவல்

ட்ராய் வெளியிட்ட தகவல்

அதாவது இது தொடர்பாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்ட தகவல் என்னவென்றால், 4ஜி பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகிய இரண்டின் சராசரி வேகத்திலுமே கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

விண்வெளி பிரசவம்! நட்சத்திரம் பிறக்கும் அரிய காட்சி.. வியப்பில் ஆழ்த்திய James webb தொலைநோக்கி!விண்வெளி பிரசவம்! நட்சத்திரம் பிறக்கும் அரிய காட்சி.. வியப்பில் ஆழ்த்திய James webb தொலைநோக்கி!

 20.3 எம்பிபிஎஸ்

அதாவது கடந்த மாதத்தில் ஜியோ நிறுவனம் விநாடிக்குச் சராசரியாக 20.3 எம்பிபிஎஸ் என்ற வேகத்தைப் பதிவு செய்தது. இதன் மூலம் பதிவிறக்க வேகத்தில் தனது முன்னிலையை ஜியோ நிறுவனம் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

அடேங்கப்பா.. பட்ஜெட் விலையில் இத்தனை 5G போன்கள் கிடைக்கும்போது ரூ.30,000 போன்கள் எதுக்கு?அடேங்கப்பா.. பட்ஜெட் விலையில் இத்தனை 5G போன்கள் கிடைக்கும்போது ரூ.30,000 போன்கள் எதுக்கு?

ஏர்டெல்?

ஏர்டெல்?

அதேசமயம் பதிவிறக்க வேகத்தில் 15எம்பிபிஎஸ் வேகத்துடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 4.5எம்பிபிஎஸ் சராசரி பதிவிறக்க வேகத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!

ஜியோவின் பதிவேற்ற வேகம்

ஜியோவின் பதிவேற்ற வேகம்

ஆனால் பதிவேற்ற வேகத்தை பொருத்தவரை ஜியோ சற்று பின்தங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது கடந்த செப்டம்பர் மாதம் ஜியோவின் பதிவேற்ற வேகம் 6.4எம்பிபிஎஸ் ஆக இருந்தது, அக்டோபரில் 6.2எம்பிபிஎஸ் ஆகக் குறைந்துவிட்டது. இருந்தபோதிலும் இந்தப் பிரிவில் ஜியோ நிறுவனம் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?

வோடபோன் ஐடியா?

வோடபோன் ஐடியா?

குறிப்பாக பதிவேற்ற வேகத்தில் ஜியோவுக்கு அடுத்தபடியாக வோடபோன் ஐடியா சாரசரியாக 4.5 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதன்பின்பு ஏர்டெல் நிறுவனம் சராசரியாக 2.7 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தைப் பதிவு செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சத்தமின்றி சிலிண்டர்களில் ஒட்டப்படும் QR Code: எதற்கு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!சத்தமின்றி சிலிண்டர்களில் ஒட்டப்படும் QR Code: எதற்கு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

மேலும் கடந்த மாதம் ஜியோவின் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கிய 12 திட்டங்கள் - ஒரே நேரத்தில் - நீக்கப்பட்டது. அதன் பின்னர் ரூ 1,499 மற்றும் ரூ.4,199 என்கிற 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களின் வழியாக மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா அணுக கிடைத்தது. தற்போது அந்த இரண்டு திட்டங்களும் கூட நீக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம்

கடந்த மாதம் நீக்கப்பட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்களின் பட்டியலில், ரூ.1499 மற்றும் ரூ.4,199 மதிப்பிலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களும் இணைந்துள்ளன. இதன் மூலம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கி வந்த அனைத்து ரீசார்ஜ் திட்டங்களையும் ஜியோ நிறுவனம் கைவிட்டுள்ளது! ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ரீசார்ஜ் பட்டியலிலும் சரி, பேடிஎம் மற்றும் அமேசான் பே போன்ற மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் தளங்களிலும் சரி.. எங்குமே ரூ.1,499 மற்றும் ரூ.4,199 திட்டங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio tops 4G network speed rankings in October: What is Airtel, Vodafone Idea situation? Trai: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X