ஏப்ரல் மாதத்திலும் ஜியோ 4ஜி வேகம் தான் டாப்பு - ட்ராய் 'ஸ்பீட் டெஸ்ட்' அறிக்கை.!
மேலும், 4ஜி நெட்வொர்க் வேக விளக்கப்படத்தில் ஆர்ஜியோ நான்காவது முறையாக தொடர்ச்சியான முன்னிலை பெற்று வருகிறது.
டெலிகாம் ரெகுலேட்டரி ஆன ட்ராய் (இந்தியா டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையம்) அளித்த சமீபத்திய அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் அதன் 4ஜி நெட்வொர்க்கின் வேகத்தை அதிகரித்துள்ளது.
அதாவது ரெகுலேட்டரின் அறிக்கை ஜியோ அதன் பதிவிறக்க வேகத்தை அதிகரித்துள்ளது என்பதை அதன் மைஸ்பீட் (MySpeed) பயன்பாட்டின் உதவியுடன் உண்மையான நேர அடிப்படையில் கணக்கிட்டுள்ளது. கோட்பாட்டளவில், ஒரு பயனர் ஒரு திரைப்படத்தை சுமார் 5 நிமிடங்களில் அதாவது 16 எம்பிபிஎஸ் வேகத்தில் பதிவிறக்க செய்ய முடியும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், ரிலையன்ஸ் ஜியோ 19.12 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் முந்தைய மாதத்தின் 18.48 மெகாபிக்சல் என்ற செயல்திறனை மேம்படுத்தியுள்ளது என்பது வெளிப்படை. மேலும், 4ஜி நெட்வொர்க் வேக விளக்கப்படத்தில் ஆர்ஜியோ நான்காவது முறையாக தொடர்ச்சியான முன்னிலை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதத்தில், ஐடியா செல்லுலார் நெட்வொர்க்கின் பதிவிறக்க வேகம் 13.70 எம்பிபிஎஸ் என்றும் மற்றும் வோடபோன் நெட்வொர்க் வேகம் 13.38 எம்பிபிஎஸ் என்றும் பதிவாகியுள்ளது.
வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து 35 சதவீத சந்தை பங்கைக் (23 பில்லியன் டாலர்கள்) கொண்ட நாட்டின் மிகப்பெரிய மொபைல் போன் ஆபரேஷனை உருவாக்கும் தங்கள் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் 10.15 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது என்பதும், இது ஐடியா வோடாபோன் வேகத்தை விட குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications