அடேங்கப்பா.. 4ஜி பதிவிறக்க வேகத்தில் பட்டைய கிளப்பிய ஜியோ.!
கடந்த செப்டம்பர் மாதம் 4ஜி சேவையில் 20.9 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன் ஜியோ நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது என டிராய் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜியோவின் 4ஜி நெட்வொர்க் சேவையின் வேகம் செப்டம்பரில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் ஏர்டெலின் பதிவிறக்க வேகம் 85 சதவீதம் அதிகரித்து 11.0 எம்பிபிஎஸ் ஆக உள்ளது. பின்பு வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பதவிறக்க வேகம் 60 சதவீதம் உயர்ந்து 14.4 எம்பிபிஎஸ் ஆகவும் உள்ளது.
அதேபோல் பதிவேற்றத்தில் 7.2 எம்பிபிஎஸ் வேகத்துடன் வோடபோன் ஐடியா முதல் இடத்தை பிடித்துள்ளது. பின்பு பதிவேற்றத்தில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் முறையே 6.2 எம்பிபிஎஸ் மற்றும் 4.5 எம்பிபிஎஸ் வேகத்துடன் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்ததாக டிராய் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் தனது புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் மலிவு விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
அதாவது கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதன் விற்பனை தேதி மாற்றப்பட்டது. சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி தீபாவளிக்கு முன்பாக வெளியாகும் இந்த அசத்தலான ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம். குறிப்பாக சிப்செட்களின் பற்றாக்குறையால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை வெளியிடுவதை தாமதப்படுத்தியது எனத் தகவல் வெளிவந்துள்ளது.
அதேபோல் ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் ஆனது கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து உருவாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக
கூகுள் நிறுவனத்தின் பல அருமையான அம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் டிஸ்பிளே அல்லது 6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ, கேமிங் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும். அதேபோல் 1440x720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் ஜியோபோன் நெக்ஸ்ட்.
ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட் வசதி உள்ளது. அதிகாரப்பூர்வ படங்களின்படி, ஸ்மார்ட்போனில் எளிதில் திறக்கக்கூடிய பேக் கேஸ் இருக்கும், எனவே இந்த சாதனம் மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் 3000 எம்ஏஎச் அல்லது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு ஸ்லாட்டுகளிலும் 4 ஜி ஆதரவுடன்
இரட்டை சிம் கார்டு ஸ்லாட்டுகளை வழங்க வாய்ப்புள்ளது. இதுதவிர வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, ஸ்னாப்சாட், சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன்நெக்ஸ்ட் சாதனம். இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் திட்டங்கள் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications