Home
News

பிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ 'டாப் அப்'! ராஜ தந்திரம்-பலே ஐடியா.!

ஜியோ நிறுவனம் சமீபத்தில் எதிர்பார்த்திடாத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி இதுவரை பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த வரம்பற்ற அழைப்பு மற்றும் அதிகளவிலான டேட்டா திட்டங்களுக்குப் பிறகு, தற்பொழுது பிற நெட்வொர்க்குகளில் உள்ள எண்களுக்கான அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

பிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ 'டாப் அப்'!

இந்த எதிர்பாராத அறிவிப்பு ஜியோ பயனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜியோ பயனர்கள், ஜியோ எண்ணிற்கு மற்றும் பிற நெட்வொர்க் எண்ணிற்கும் அழைப்பு சேவையைப் பயன்படுத்தும் பொழுது ஜியோ நிறுவனம் முன்பிருந்தே எந்த ஒரு கட்டணத்தையும் வசூலிப்பது இல்லை. இதைத் தான் ஜியோ நிறுவனம் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது.

ஆனால் தற்பொழுது பிற நெட்வொர்க் எண்களுக்கு, ஜியோ பயனர்கள் அழைப்பு சேவையைப் பயன்படுத்தினால் நிமிடத்திற்கு 0.06 பைசா வசூலிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கட்டணத்தை முற்றிலும் இலவசமாக வழங்காமல் சலுகையுடன், சில புதிய டாப் அப் திட்டங்களைக் கொண்டு சமாளிக்கும் விதத்தில் ஜியோ தற்பொழுது அறிவித்துள்ளது.

பிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ 'டாப் அப்'!
  • ரூ.10 திட்டம் உங்களுக்கு 124 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 1 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
  • ரூ.20 திட்டம் உங்களுக்கு 249 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 2 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
  • ரூ.50 திட்டம் உங்களுக்கு 656 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 5 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
  • ரூ.100 திட்டம் உங்களுக்கு 1,362 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 10 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.

இந்த புதிய டாப் அப் திட்டங்களை பயன்படுத்தி, ஜியோ பயனர்கள் பிற நெட்வொர்க் எண்களுக்கு அழைப்பு சேவையைக் குறைந்த கட்டணத்தில் இலவச டேட்டாவுடன் பயன்படுத்திக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Top Up Plans For Reduce Charges From Jio To Numbers On Other Phone Networks : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X