Home
News

அடுத்த வாரம்.. 4ஜி யூசர்கள் எல்லோரும் அடிச்சு புடிச்சு Jio 5G-க்கு மாறப்போறாங்க.. அம்பானியின் மாஸ்டர் பிளான்!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, இந்தியா முழுவதுமுள்ள பல முக்கிய நகரங்களில் அதன் ட்ரூ 5ஜி நெட்வொர்க்கை (True 5G Network) புயல் வேகத்தில் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. மேலும் தகுதியான ஜியோ வாடிக்கையாளர்கள் 5ஜி சேவைக்கு மாறிக்கொண்டும் இருக்கின்றனர்.

ஒருவேளை நீங்கள் இன்னமும் ஜியோ 5ஜி-க்கு மாறவில்லை என்றால், அது தொடர்பாக நீங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால்.. இந்த வாரம் முகேஷ் அம்பானி செய்யப்போகும் ஒரு "வேலையானது" அடுத்த வாரமே உங்களை 5ஜி-க்கு அப்கிரேட் ஆகச்சொல்லி தூண்டலாம். ஏனென்றால் ஜியோவின் 5ஜி ஆட்டத்திற்குள் நோக்கியா (Nokia) நிறுவனம் நுழையவுள்ளது!

4ஜி யூசர்கள் எல்லோரும் அடிச்சு புடிச்சு Jio 5G-க்கு மாறப்போறாங்க!

எகனாமிக் டைம்ஸ் வழியாக வெளியான அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் ஆனது 5ஜி நெட்வொர்க் உபகரணங்களை (5G Network Equipment) வாங்குவதற்காக நோக்கியா நிறுவனத்துடன் $1.7 பில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.14,016 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தில், விரைவில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா உடனான இந்த ஒப்பந்தம், ஸ்வீடிஷ் பன்னாட்டு நெட்வொர்க்கிங் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சனிடம் (Ericson) இருந்து 2.1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உபகரணங்களை வாங்குவதாக வெளியான ரிலையன்ஸ் ஜியோவின் முந்தைய அறிவிப்பை தொடர்ந்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா முழுவதும் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் சேவைகளை (5G Mobile Broadband Services) அறிமுகப்படுத்த, ஜியோ நிறுவனம் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதற்கு, இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக அமையலாம். மேலும் ஜியோவின் இந்த நடவடிக்கை, அதன் 5ஜி நெட்வொர்க், எவ்வளவு பலமானதாக இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டமும் கூட!

ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ, மிகவும் திறமையான 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில் பிரத்யேக 5ஜி அலைக்கற்றைகளை (Highly efficient 700 MHz band) தன்வசம் வைத்திருக்கிறது. இதன் மூலம் தற்போதுள்ள 4ஜி உள்கட்டமைப்பை சார்ந்து இருக்காமல் ஜியோ நிறுவனத்தால் சுயாதீனமாக நாடு தழுவிய 5ஜி வெளியீட்டை செயல்படுத்த முடியும்.

இதற்கிடையில் நோக்கியா மற்றும் எரிக்சன் போன்ற ஐரோப்பிய விற்பனையாளர்கள் உடனான கூட்டணி ஜியோ 5ஜி நெட்வொர்க்கை இன்னும் பலமானதாக மாற்றும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஜியோவின் 5ஜி சேவைக்கு பின்னால் நடக்கும் இதுபோன்ற வேலைகளை பற்றி தெரிந்துகொள்ளும் எந்தவொரு ஜியோ 4ஜி பயனருமே, கூடிய விரைவில் 5ஜி-க்கு மாறிவிட வேண்டும் என்கிற எண்ணத்திற்குள் குதிப்பர் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

நோக்கியா மற்றும் எரிக்சன் மட்டுமல்ல, ஜியோவின் 5ஜி தொடர்பான கொள்முதல்களை ஆதரிப்பவர்களில் எச்எஸ்பிசி (HSBC), ஜேபி மார்கன் (JP Morgan) மற்றும் சிட்டிக்ரூப் (Citigroup) போன்ற நிறுவனங்களும் அடங்கும். 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்தியாவின் 5ஜி ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதிகளானது 4ஜி ஏற்றுமதியை விட மிகவும் அதிகமாக இருக்கும் என்பதை மேற்கண்ட எல்லா நிறுவனங்களுமே நன்கு அறியும்; அதை நீங்களும் அறிந்துகொள்ளவும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio To Sign Contract with Nokia For 5G network Equipment Why It is a Good News For Jio 4G Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X