Home
News

மலிவு விலையில் இரண்டு 5ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் ஜியோ.. தினமும் 2ஜிபி டேட்டா.. ஓடிடி.. வாய்ஸ் கால்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இப்போதும் மலிவு விலையில் அதிக நன்மைகளை தரும் 5ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இப்போது அந்த மலிவு விலை 5ஜி ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் (Reliance Jio Rs 198 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும்.

மலிவு விலையில் இரண்டு 5ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் ஜியோ..

இந்த ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோ நிறுவனத்தின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Reliance Jio Rs 349 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும்.

குறிப்பாக ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும் ஜியோ ஃபைனான்ஸ் ஆப் (Jio Finance App) மூலமாக தங்கம் வாங்கும்போது, 2 சதவீத தங்கம் கூடுதலாக கிடைக்கும். இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கிறது. ஒருவேளை அதிக நாட்கள் வேலிடிட்டி வேண்டும் என நினைக்கும் ஜியோ பயனர்கள் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

மலிவு விலையில் இரண்டு 5ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் ஜியோ..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளது. நன்மைகள் இதில் உள்ளது.

90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio to offer two affordable 5G prepaid plans in India: check price and benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X