புது Jio 5G Phone மிகவும் மலிவான விலையில் வெளிவருமா? என்ன விலையில், எப்போது கிடைக்கும்?

|

இந்தியாவில் 5G சேவை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில், ஏராளமான பயனர்கள் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு மாறுவார்கள் என்று உறுதியாகக் கூறப்படுகிறது. 5ஜி சேவையின் முழு வேகத்தை அனுபவிக்க, மக்களிடம் 5ஜி டிவைஸ் இருப்பது அவசியமாகிறது. மலிவு விலையில் 5ஜி டிவைஸை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய Jio 5G Phone என்ற சாதனத்தை உருவாக்கி வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ புதிய Jio 5G Phone டிவைஸை உருவாக்குகிறதா?

ரிலையன்ஸ் ஜியோ புதிய Jio 5G Phone டிவைஸை உருவாக்குகிறதா?

ஆம், ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 4ஜி சாதனத்தை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இப்போது அடுத்தபடியாக, அடுத்த தலைமுறை 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, ஜியோ அறிமுகம் செய்யவிருக்கும் புதிய Jio 5G Phone குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இந்த Jio 5G Phone டிவைஸை ரிலையன்ஸ் ஜியோ என்ன விலையில் அறிமுகம் செய்யுமென்பது குறித்த தகவல்கள் நமக்குத் தெரியவந்துள்ளது.

இந்தியாவிற்கு மலிவான 5G ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறதா?

இந்தியாவிற்கு மலிவான 5G ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறதா?

அக்டோபர் 1ம் தேதி அல்லது அக்டோபர் மாதத்தில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் அதன் 5G சேவைகளை முக்கியமான இந்திய நகரங்களில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. டெலிகாம் ஆபரேட்டர்கள் அதன் 5ஜி முதலீடுகளில் தங்கள் வருவாயை முடிந்தவரை விரைவாகப் பெறுவதை உறுதிசெய்ய, இந்தியாவிற்கு மலிவான 5G ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறது.

இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

மலிவு விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்ய திட்டமா?

மலிவு விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்ய திட்டமா?

ஜியோ ஏற்கனவே ஸ்மார்ட்போன் வணிகத்திலும் உள்ளது என்பதனால், புதிய 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்யத் திட்டமிடுகிறது. ஜியோ நிறுவனம் கூகுளுடன் இணைந்து மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதை நாம் மறக்க முடியாது. இதனைத் தொடர்ந்து, நிறுவனம் மிக விரைவில் மலிவு விலையில் 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது.

புதிய Jio 5G Phone சாதனத்தை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

புதிய Jio 5G Phone சாதனத்தை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்தியாவில் 5G கவரேஜ் விரிவடைந்து பரந்த 4G பயனர் தளத்தை ஈர்க்கும் போது, ​​ஜியோ ரூ. 12,000 விலைக்குக் குறைவான விலையில் 5G போனை அறிமுகம் செய்யத் திட்டமிடுகிறது. இதற்காக ஜியோ மும்முரமாக வேலை செய்து வருகிறது. இந்த புதிய மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த விரிவான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

5ஜி mmWave பேண்ட்டில் இந்த போன் இயங்குமா?

5ஜி mmWave பேண்ட்டில் இந்த போன் இயங்குமா?

ஆனால், இது சிறிது காலத்திற்குப் பிறகுதான், ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பாக இந்த 5ஜி போன் நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மலிவு விலை 5G டிவைஸ் சாதனம் 5ஜி mmWave மற்றும் sub-6 GHz பேண்டுகளுக்கு ஆதரவுடன் வரும் என்று கூறப்படுகிறது.இப்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் mmWave பேண்டுகளை ஆதரிக்கவில்லை என்பதால் இது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

அதே பழைய யுக்தியை ஜியோ கையாள்கிறதா?

அதே பழைய யுக்தியை ஜியோ கையாள்கிறதா?

ஏற்கனவே இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் 5ஜி போன்கள் கிடைப்பதனால், ஜியோ மலிவான 5ஜி போனை அறிமுகம் செய்யத் திட்டமிடுகிறது. ஜியோ எப்போதுமே குறைந்த விலையில் முடிந்த வரை சிறந்த தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதே யுக்தியைத் தான் ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் இப்போது இந்த புது 5ஜி போனிலும் களமிறக்கத் திட்டமிட்டு வருகிறது.

WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

JioPhone Next 4ஜி இன் விலை இப்போது வெறும் ரூ.4,000 தானா?

JioPhone Next 4ஜி இன் விலை இப்போது வெறும் ரூ.4,000 தானா?

சரி, எது எப்படியாக இருந்தாலும், மலிவு விலையில் 5ஜி போன் கிடைத்தால் சந்தோசம் தான். நினைவு கூற, Jio நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டில், JioPhone Next என்ற 4ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.6000 விலைக்கு அறிமுகப்படுத்தியது. ஆனால், இப்போது இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ.4,000 விலை வரம்பில் வாங்கக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய 5ஜி ஸ்மார்ட்போனை நாம் ரூ.10,000 விலையில் எதிர்பார்க்கலாமா?

புதிய 5ஜி ஸ்மார்ட்போனை நாம் ரூ.10,000 விலையில் எதிர்பார்க்கலாமா?

கொரோன காலத்திற்குப் பின், சிப் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், வரும் ஆண்டுகளிலும் தட்டுப்பாடு காரணமாக, ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தட்டுப்பாடு ஒருவேளை குறைந்தால், ஜியோ அறிமுகம் செய்யவிருக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை நாம் ரூ.10,000 விலை வரம்பில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்போதைக்கு, என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Jio To Launch New 5G Smartphone Under Rs 12000 In India Before 2024 With 5G mmWave Band Support

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X