Jio Free calls: இனி கவலை வேண்டாம்., பிளான் முடிந்தாலும் இலவச அழைப்பு?

|

ஜியோ பிளான் முடிந்தாலும் செல்லுபடியாகும் நாட்களுக்கு பிறகும் அடுத்த 24 மணி நேரங்களுக்கு பிறகும் ஜியோ டூ ஜியோ எண்களை அழைக்க அனுமதிக்கிறது என கூறப்படுகிறது.

போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு சலுகை

போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு சலுகை

தொலைத் தொடர்புநிறுவனங்கள் ஒவ்வொரு நிறுவனங்களோடு போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளோடு திட்டங்களை அறிவித்து வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ஏணைய நன்மைகளை பெற்று வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் மிகப்பெரிய ஆப்ரேட்டராக உருவெடுத்துள்ளது என்பதில் ஆச்சரியம் இல்லை.

சலுகை காலத்தை நீட்டித்து வழங்குகிறது

சலுகை காலத்தை நீட்டித்து வழங்குகிறது

ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகை காலத்தை நீட்டித்து வழங்குகிறது. இந்த திட்டம் முடிவடைந்ததும் அடுத்த 24 மணிநேரங்களுக்கு சலுகை காலம் நீட்டித்து வழங்கப்படுகிறது. ப்ரீபெய்ட் பயனர்களுக்கான இந்த சலுகை அறிவிப்பு கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பயனளிக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை.

டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!டீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்!

சில குறைபாடுகள் உள்ளது

சில குறைபாடுகள் உள்ளது

இருப்பினும் ஜியோவின் இந்த அறிமுகத்தில் சில குறைபாடுகள் உள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் இந்த சலுகையானது ரூ.98 திட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ.98-ல் ரீசார்ஜ் செய்து இதன் செல்லுபடியாகும் நாட்களுக்கு பிறகும் அடுத்த 24 மணி நேரங்களுக்கு பிறகும் ஜியோ டூ ஜியோ எண்களை அழைக்க அனுமதிக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோ இந்த சலுகை குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. எனவே மற்ற திட்டங்களில் இந்த சலுகை கிடைக்குமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

ஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.2399 திட்டம்

ஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.2399 திட்டம்

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.2399-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை 365நாட்கள் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெலிகாம் டாக் வலைதளத்தின் அறிவிப்பு அடிப்படையில் இந்த திட்டம் ஜியோ அல்லாத மற்றநெட்வொர்க்குகளுக்கு கால் அழைப்பு நன்மைகளை பற்றி சரியாக விவரங்கள் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தினசரி 2ஜிபி டேட்டா உள்ளிட்ட சில சலுகைகள் இந்த திட்டத்தில் இருப்பதால் பலர் இதை தேர்வு செய்ய விரும்புவார்கள்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.349 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.349 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349-திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.இதுதவிர ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா தேவையில்லை 2ஜிபி டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ரூ.249-திட்டம்.இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199-திட்டம் தினசரி 2ஜபி டேட்டா தேவையில்லை 1.5ஜிபி டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ரூ.199-திட்டம்.இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்

சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ரிலையன்ஸ் ஜியோவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. ஜனவரி 2020 இல், நிறுவனம் தனது புதிய நெட்வொர்க்கில் 6.5 மில்லியன் சந்தாதாரர்களைச் சேர்த்தது. ரிலையன்ஸ் ஜியோ 2019 டிசம்பரில் கட்டணங்களை அதிகரித்துள்ளது, ஆனால் இந்த அதிகரிப்பு சந்தையை பாதித்திருக்கவில்லை. ஜியோவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை டிசம்பரில் சற்று குறைந்தது, ஆனால் நிறுவனம் மீண்டும் ஜனவரியில் அதிகரிக்கச் செய்தது.

இனி அந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி கிடையாது: ஜியோ அறிவிப்பு., வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!இனி அந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி கிடையாது: ஜியோ அறிவிப்பு., வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஜியோ குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கை

ஜியோ குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கை

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. நான்காவது காலாண்டின் முடிவில், ஜியோவிற்கு 388 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்தனர். பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை நான்காவது காலாண்டு நிதி முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை. மூன்றாம் காலாண்டில் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா முறையே 283.04 மில்லியன் மற்றும் 304 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றுள்ளன.

source: indiatvnews.com

Best Mobiles in India

English summary
jio to jio free calls available after plan expires also

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X