Home
News

தினமும் 2.5ஜிபி டேட்டா வேணுமா? அப்போ இந்த மூன்று Jio திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோவின் ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

தினமும் 2.5ஜிபி டேட்டா வேணுமா? இந்த Jio திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் இந்த ஜியோ திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை கவனத்தில் கொள்க.

ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 3599 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும் கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

குறிப்பாக ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.

ஜியோ நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 3999 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டம் ஃபேன் கோட் (Fan Code) என்கிற ஓடிடி தளத்திற்கான இலவச அணுகலுடன் வருகிறது.

தினமும் 2.5ஜிபி டேட்டா வேணுமா? இந்த Jio திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 முடிிள ஆக குறையும்.

அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள 5ஜி போன் மலிவு விலையில் தான் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. எனவே இந்நிறுவனத்தின் 5ஜி போன் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Three Prepaid Plans Offer 2.5GB Data Daily and Unlimited Offers: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X