Home
News

5ஜி சோதனை: ரெட்மி இந்தியா நிறுவனத்துடன் இணைந்த ஜியோ.!

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி,ரெட்மி இந்தியா நிறுவனம் ஆனது ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த 5ஜி சோதனை ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11டி 5ஜி

அதேபோல் இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் நவம்பர் 30-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 5ஜி தொழில்நுட்பத்தை பல்வேறு
நிலைகளில் சோதனை செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

ன் மூலம் பயனர்களுக்கு

எனவே இதன் மூலம் பயனர்களுக்கு மேம்பட்ட 5ஜி அனுபவம் கிடைக்கும் என இரண்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. அதேபோல் புதிய ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தமாக ஏழு 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்வதாக கூறப்படுகிறது. எனவே அதிவேக டவுன்லோட்வேகம் கிடைத்ததாக இரு நிறுவனம் தெரிவித்துள்ளன. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 2,400x1,080 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 11டி 5ஜி ஸ்மார்ட்போன்

இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி/128ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

டியாடெக் Dimesity 810 சிப்செ

புதிய ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimesity 810 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி சென்சார்

அதேபோல் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் ஆதரவுகள் உள்ளன.

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன்

கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
jio tests 5G in partnership with Redmi India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X