Home
News

விட்டு விட்டு கிடைக்கும் Jio 5G-க்கு முடிவு.. களத்தில் குதித்த அம்பானியின் IRS.. கஸ்டமர்கள் என்ன செய்யனும்?

நீங்கள் ஜியோ சிம் கார்டு பயன்படுத்தினால்.. ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும் பகுதியில் இருந்தும் கூட உங்களுக்கு விட்டு விட்டு ஜியோ 5ஜி நெட்வொர்க் கிடைத்தால்.. கவலையை விடுங்கள் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ "இந்த குறையை" நிவர்த்தி செய்ய களத்தில் குதித்து விட்டது.

அப்படி என்ன செய்கிறது? ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது மொபைல் நெட்வொர்க்குகள் கவரேஜ் இடைவெளிகளை கையாளும் முறையை மாற்றக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பத்தில் சோதனைகளை நடத்தி வருகிறது. கவரேஜ் பலவீனமாக உள்ள பகுதிகளுக்கு, குறிப்பாக உட்புறங்களுக்கு 5ஜி சிக்னல்களை திருப்பி அனுப்ப வடிவமைக்கப்பட்ட பேனல்களான இன்டெலிஜென்ட் ரிஃப்ளெக்டிங் சர்ஃபேஸ்களை (Intelligent Reflecting Surfaces - IRS) நிறுவனம் சோதித்து வருகிறது.

விட்டு விட்டு கிடைக்கும் Jio 5G-க்கு முடிவு!

மொத்த கதையும் அப்படியே மாறுகிறது: பலரும் நினைத்ததை விட இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன, நகரங்கள் முன்னெப்போதை விடவும் பலமாக இணைக்கப்பட்டுள்ளன, அவுட்டோர் ஸ்பீடும் வலுவாக உள்ளது. ஆனால் ஒரு அலுவலகம் அல்லது ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்தால் - மொத்த கதையும் அப்படியே மாறுகிறது: சிக்னல்கள் குறைகின்றன. அழைப்புகள் துண்டிக்கப்படுகின்றன!

குறிப்பாக எம்எம்வேவ்வில் (mmWave) இந்த சிக்கல் மோசமாக உள்ளது. இது அதிக அளவிலான டேட்டாவை கொண்டு செல்லும் ஆனால் சுவர்கள் அல்லது கண்ணாடி வழியாக செல்ல முடியாது. ஆப்ரேட்டர்கள் பொதுவாக கூடுதல் ரேடியோக்கள் அல்லது சிறிய செல்களை பயன்படுத்தி இதை சரிசெய்கிறார்கள். ஆனால் அது விலை உயர்ந்தது, மெதுவானது மற்றும் எப்போதும் நடைமுறைக்கு ஏற்றது அல்ல!

இந்த இடத்தில் தான் ஜியோவின் ஐஆர்எஸ் என்ட்ரி கொடுக்கிறது! ஐஆர்எஸ் சற்று வித்தியாசமானது. இதன் பேனல் டிரான்ஸ்மிட் செய்யாது. மாறாக இது பிரதிபலிக்கும். இதை ஒரு சிக்னல் மிரர் (Signal Mirror) ஆக நினைத்து பாருங்கள். இதன்மூலம் மேற்பரப்பில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய கூறுகளை, ஒரு அலையை பிடித்து சரியான திசைக்கு தள்ள ட்யூன் செய்யலாம்.

இதை ஒரு சுவர், ஜன்னல் அல்லது தெரு கம்பத்தில் பொருத்த முடியும். பேனல் பேஸ் ஸ்டேஷனில் இருந்தபடியே - முன்னதாக ஒரு டெட் ஸோன் ஆக இருந்த இடங்களுக்கு, மூலைகளுக்கு மற்றும் அறைகளுக்கு சிக்னல்களை திருப்பி விடும். அதாவது இது வடிவமைப்பில் மிகவும் எளிமையானது ஆனால் இதன் விளைவு மிகவும் சக்தி வாய்ந்தது.

ஜியோ ஏன் இதை செய்ய விரும்புகிறது? ரிலையன்ஸ் ஜியோ 5ஜி-யில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது, ஆனால் பயனர்களின் திருப்தி ஆனது பெரும்பாலும் உடைந்து போகும் இடம் "கவரேஜ்" ஆக உள்ளதை ஜியோ நிறுவனம் நன்கு அறியும். கூடுதல் தளங்களை சேர்ப்பது ஒரு தீர்வாகும், ஆனால் ஒவ்வொரு டவரும் - அதற்கான செலவு, ஃபைபர், மின்சாரம் ஆகியவற்றுடன் வருகிறது.

ஆனால் மறுகையில் உள்ள ஐஆர்எஸ் ஆனது மிகவும் இலகுவானது, மிக குறைந்த ஆற்றலை பயன்படுத்துகிறது, மேலும் இதை 'பிளேஸ்' செய்ய முடியும். இந்திய சூழல்களில் இந்த பேனல்கள் வேலை செய்ய முடியுமா என்பதை ஜியோ சோதித்து வருகிறது. முடிவுகள் நேர்மறையாக இருந்தால், ஜியோவின் கவரேஜ் டூல்கிட்டின் ஒரு பகுதியாக ஐஆர்எஸ் டவர்கள் மற்றும் சிறிய செல்களை பெறலாம்.

கஸ்டமர்கள் என்ன செய்ய வேண்டும்? ஜியோவின் ஐஆர்எஸ் ஆனது ஒரு ஜியோ பயனருக்கு எளிமையான மாற்றமாக அதே சமயம் கவனிக்கத்தக்கதாக இருக்கும். உங்கள் வீட்டின் மூலைகளில் சரியாக கிடைக்காத வீடியோ கால் திடீரென்று சரியாக இயங்கக்கூடும். கால் ட்ராப் குறையக்கூடும். கிட்டத்தட்ட வீடுகளுக்குள் பயனற்றதாக இருக்கும் எம்எம்வேவ் வேகம் ஆன்ட்டி ஒருவழியாக நடைமுறைக்கு வரக்கூடும். இதற்காக வாடிக்கையாளர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Testing New Technology Called IRS to Eliminate 5G Dead Zones Improve Coverage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X