ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.26 திட்டம்: 2ஜிபி டேட்டா.. வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா? இது சூப்பர்ஹிட் ரீசார்ஜ்..

|

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு முன்பைவிட மிக வேகமாக உயர்ந்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை உயர - உயர, டேட்டா பயன்பாட்டின் தேவையும் இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக கோவிட் பரவத்துவங்கிய காலத்திற்குப் பின்னர் டேட்டாவின் தேவை இன்னும் அதிகமாகிவிட்டது. உண்மையில் இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் டேட்டாவின்தேவை உள்ளது. அதிலும் குறைந்த விலையில் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டத்தையே மக்கள் அதிகம் ரீசார்ஜ் செய்ய விரும்புகிறார்கள்.

குறைந்த விலையில் அதிக டேட்டா தானே வேண்டும் உங்களுக்கு?

குறைந்த விலையில் அதிக டேட்டா தானே வேண்டும் உங்களுக்கு?

இதைக் கருத்தில் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இன்னும் சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவர்கள் வழங்கி வந்த சில திட்டங்களில் புதிய மாற்றங்களை மேற்கொண்டு அதன் பயனர்களின் தேவை பூர்த்தி செய்ய முயன்று வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில், குறைந்த விலையில் அதிக டேட்டா என்றால் உடனே அனைவரின் நினைவிற்கு வரும் முதல் நிறுவனம் என்றால், அது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமாக மட்டும் தான் இருக்கும். அப்படியான நிறுவனம் உங்களுக்கு மிகவும் மலிவான விலையில் அதிக டேட்டா கிடைக்கக் கூடிய திட்டங்களை வைத்துள்ளது.

வழக்கமாக கிடைக்கும் டேட்டா மீது கூடுதல் டேட்டா வேண்டுமா?

வழக்கமாக கிடைக்கும் டேட்டா மீது கூடுதல் டேட்டா வேண்டுமா?

நீங்கள் வழக்கமாக ரீசார்ஜ் செய்யும் ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வு செய்யும் போது, அதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி மீதும் டேட்டா அளவின் மீதும் அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்றால், உங்களுக்கான டேட்டா பற்றாக்குறையை குறைத்து, வழக்கமாகக் கிடைக்கும் டேட்டாவை விட அதிகமாகப் பயனடைய இந்த விஷயத்தின் மீதும் இனி கவனம் செலுத்துங்கள். அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்காகவே கம்மி விலையில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்தது தான் 'டேட்டா ஆட் ஆன்' திட்டங்கள். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு விலைகளுடன் பல ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது.

ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் வீணாகிறதா? இப்படி செஞ்சு பாருங்க.. பணமும் வீணாகாது பயணமும் செய்யலாம்..ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் வீணாகிறதா? இப்படி செஞ்சு பாருங்க.. பணமும் வீணாகாது பயணமும் செய்யலாம்..

சிறந்த சில சூப்பர்ஹிட் டேட்டா ஆட் ஆன் ரீசார்ஜ் திட்டங்கள்

சிறந்த சில சூப்பர்ஹிட் டேட்டா ஆட் ஆன் ரீசார்ஜ் திட்டங்கள்

வழக்கமான ரீசார்ஜ் திட்டத்துடன் கிடைக்கும் கிடைக்கும் தினசரி டேட்டா போதுமானதாக இல்லாதவர்கள் இந்த மலிவு விலை திட்டங்களைக் கருத்தில்கொள்ளலாம். ஜியோ நிறுவனம் தனது இணையதளத்தில் இந்தத் திட்டங்களை பல்வேறு வகைகளாகப் பிரித்துள்ளது. அதிலிருந்து சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சிலருக்கு மிகவும் கடினமாகிவிடும். உங்களுடைய இணையத் தேவையைக் கருத்தில் கொண்டு, உங்கள் நேரத்தை மிச்சம் பிடிக்கும் வகையில் சிறந்த சில ரீசார்ஜ் திட்டங்களை இங்குத் தொகுத்துள்ளோம்.

இந்தியப் பயனர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற திட்டமா இது?

இந்தியப் பயனர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற திட்டமா இது?

இந்த திட்டங்களில் இருந்து நீங்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இதற்கென்று தனியாக வேலிடிட்டி காலமும் உள்ளது. தினசரி டேட்டா போதாத பயனர்கள் இந்த ஜியோ ஆட் ஆன் திட்டங்களைக் கருத்தில்கொள்ளலாம். சரி, இப்போது என்ன விலை திட்டங்கள் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று தெரிந்துகொள்ளலாம். ஜியோவிடம் இருந்து கிடைக்கும் மிகவும் மலிவான விலை திட்டங்களில் இந்த ரூ. 26 திட்டமும் இடம்பிடித்துள்ளது. இந்த திட்டம் இந்தியப் பயனர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வங்கி விதி: இனி பணம் எடுத்தாலும் கட்டணம்.. டெபாசிட் செய்தாலும் கட்டணமா? இது ரொம்ப முக்கியம் மக்களே..புதிய வங்கி விதி: இனி பணம் எடுத்தாலும் கட்டணம்.. டெபாசிட் செய்தாலும் கட்டணமா? இது ரொம்ப முக்கியம் மக்களே..

ஜியோவின் ரூ. 26 ஆட் ஆன் ரீசார்ஜ் திட்டம்

ஜியோவின் ரூ. 26 ஆட் ஆன் ரீசார்ஜ் திட்டம்

இது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் டேட்டா ஆட் ஆன் திட்டமாகும். அதாவது, கூடுதல் டேட்டாவிற்கு வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். ஜியோவின் 26 ரூபாய் திட்டத்தைப் பற்றிப் பேசுகையில், இந்த திட்டம் உங்களுக்கு மொத்தம் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி என்று எதுவும் உங்களுக்குக் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஜியோவின் ரூ. 62 டேட்டா ஆட் ஆன் திட்டம்

ஜியோவின் ரூ. 62 டேட்டா ஆட் ஆன் திட்டம்

இது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் டேட்டா ஆட் ஆன் திட்டமாகும். அதாவது, கூடுதல் டேட்டாவிற்கு வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். ஜியோவின் ரூ. 62 திட்டத்தைப் பற்றிப் பேசினால், இந்த திட்டத்தில் உங்களுக்கு மொத்தமாக 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோவின் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி என்று எதுவும் உங்களுக்குக் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சூரியனை தொட்ட நாசா பார்க்கர் பிரோப் ஏன் இன்னும் உருக்கவில்லை தெரியுமா? உண்மை காரணம் இது தான்..சூரியனை தொட்ட நாசா பார்க்கர் பிரோப் ஏன் இன்னும் உருக்கவில்லை தெரியுமா? உண்மை காரணம் இது தான்..

ஜியோவின் ரூ. 122 டேட்டா ஆட் ஆன் திட்டம்

ஜியோவின் ரூ. 122 டேட்டா ஆட் ஆன் திட்டம்

ஜியோவின் இந்த திட்டமும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் முன்னர் பார்த்த திட்டம் போல் இல்லாமல், உங்களுக்குத் தினமும் டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் இணையத்தைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வெறும் 122 ரூபாயில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி எதுவும் உங்களுக்குக் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஜியோவின் ரூ.152 டேட்டா ஆட் ஆன் திட்டம்

ஜியோவின் ரூ.152 டேட்டா ஆட் ஆன் திட்டம்

உண்மையில், இது ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் டேட்டா ஆட் ஆன் திட்டமாகும். அதாவது, இந்த திட்டத்தின் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டாவைப் பயன்படுத்தலாம். ஜியோவின் இந்த திட்டமும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மொத்தம் 56 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

டேட்டா ஆட் ஆன் திட்டங்களில் இந்த நன்மைகள் மட்டும் கிடைக்காதா?

டேட்டா ஆட் ஆன் திட்டங்களில் இந்த நன்மைகள் மட்டும் கிடைக்காதா?

தினசரி டேட்டா பற்றாக்குறையால் தவிக்கும் ஜியோ பயனர்களுக்கு இந்த திட்டம் சூப்பர்ஹிட் திட்டமாக செயல்படுகிறது. இந்த திட்டத்துடனும் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் வசதி என்று எதுவும் உங்களுக்குக் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த திட்டங்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமான திட்டங்களை தேர்வு செய்து பயன்பெறுங்கள். தினசரி டேட்டா பற்றாக்குறையை சந்திக்கும் பயனர்கள் இந்த டேட்டா ஆட் ஆன் திட்டங்களை தராளமாக ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம்.

Best Mobiles in India

English summary
Jio Superhit Data Add On Rs 26 Recharge Plans Gives 2GB Data For 28 Days Validity : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X