Home
News

ஓரே மாசத்தில் 80லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்று அசத்திய ஜியோ: தவிக்கும் ஏர்டெல்.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. பல்வேறு சலுகைகளை அறிவித்தன் மூலம் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றது. முதன் முதலில் இந்தியாவில் 4ஜியி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. பல்வேறு சலுகைகளை அறிவித்தன் மூலம் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றது. முதன் முதலில் இந்தியாவில் 4ஜியில் சேவையை துவங்கியது.

ஓரே மாசத்தில் 80லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்று அசத்திய ஜியோ.!

குறுகிய காலத்தில் முன்னணி நெட்வொர்க் ஆக இந்தியாவில் ஜியோ உருவெடுத்துள்ளது. தற்போது மலிவான கட்டணத்தில் பல்வேறு சேவைகளையும் அளித்து வருகின்றது. இதனால் ஜியோவின் பக்கம் அதிக வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

 ஜியோவின் 4ஜி சேவை:

ஜியோவின் 4ஜி சேவை:

ஜியோ நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவையை அதிரடியாக வழங்கியது. மேலும் வோல்ட் இ சேவையும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி அதிர விட்டது.

இதனால் அதிவேகமாக இணையத்தையும் பெற முடியும். வாடிக்கையாளர்களுக்கு அளவில்லா வாய்ஸ் கால்களையும், இலவச மிஸ்டு கால்டு அலர்ட், ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்கியது ஜியோ.

கால் டிராப் பிரச்னை இல்லை:

கால் டிராப் பிரச்னை இல்லை:

ஜியோ நிறுவனம் ரயில் மற்றும் சாலை போக்குவரத்தின் போது, எந்த விதமான கால் டிராப் பிரச்னையிலும் சிக்குவது கிடையாது என்று டிராய் அறிவித்தது.

எந்த எண்ணுக்கு அழைத்தால் உடனடியாக கால் கனெக்ட் ஆகின்றது. 4ஜியில் சிக்னல் உடன் 3ஜி, 2ஜி வசதியுடன் கால் கனெக்ட் ஆவதால், எந்த பிரச்னையும் இல்லாமல் கனெக்ட் ஆகும்.

பல்வேறு சலுகைகள்:

பல்வேறு சலுகைகள்:

ஜியோ நிறுவனம் அறிவித்தது முதல் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றது. இலவச டேட்டாவையும் அவ்வபோது அறிவித்து வாடிக்கையாளர்களை கூடுதலாக மகிழ்ச்சியடை செய்கின்றது.

மேலும், பல்வேறு ரீசார்ஜ் பிளான்களையும் வழங்கி அதிக நன்மைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால், ஜியோவுக்கு கூடுதலாக வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

 80 லட்சம் வாடிக்கையாளர்கள்  இணைவு:

80 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைவு:

ஜியோவில் கடந்த ஏப்ரல் மாத்தில் மட்டும் புதிதாக 80 லட்சத்து 82 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். தற்போது புதிய வாடிக்கையாளர்கள் இணைவும் அதிகரித்துள்ளது.

டிராயின் அறிக்கை:

டிராயின் அறிக்கை:

ஒட்டு மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 31 கோடியே 48 லட்சமாக அதிகரித்துள்ளது. செல்போன் வாடிக்கையாளர்கள் குறித்து, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜியோ முன்னோடி:

ஜியோ முன்னோடி:

அதில் வாடிக்கையாளர்கைள கருவவதில் தொடர்ந்து ஜியோ முன்னோடியாக திகழ்வ்வதாக தெரிவித்துள்ளது. இந்த வரிசையில், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கடந்த மாதம் 2 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரித்தது மொத்தம் 11 கோடியே 59 லட்சமாகியுள்ளது.

இழந்து தவிக்கும் ஏர்டெல், வோடபோன்:

இழந்து தவிக்கும் ஏர்டெல், வோடபோன்:

அதேவேலையில் ஏர்டெல் நிறுவனம் 30.28 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் நிறுவனம் 10.58 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.

லேண்ட்லைன் இணைப்புகளை பொருத்த வரையில் ஏர்டெல் 36,686 வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 8,829 வாடிக்கையாளர்களையும் கூடுதலாப் பெற்றுள்ளன.

Best Mobiles in India

English summary
Jio subscribers reach 80 lakh : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X