Google Drive-க்கு கும்பிடு.. Jio யூசர்களுக்கு கிடைக்கும் 100GB இலவச AI க்ளவுட் ஸ்டோரேஜ்.. பெறுவது எப்படி?
கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில், தனது நிறுவனத்தின் 47வது ஆண்டு பொதுகூட்டத்தின் போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஆன முகேஷ் அம்பானி, ஜியோ பிரெயின் (JioBrain) தொடர்பான அறிவிப்பின் போது ஒரு புதிய வெல்கம் ஆபரையும் (Welcome Offer) அறிவித்து இருந்தார்.
அது 100ஜிபி அளவிலான ஏஐ கிளவுட் ஸ்டோரேஜை முற்றிலும் இலவசமாக வழங்கும் ஜியோ ஏஐ கிளவுட் வெல்கம் ஆபர் (Jio AI Cloud Welcome Offer) ஆகும். இந்த வெல்கம் ஆபர் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு கிடைக்கும் என்றும், இதனுடன் சேர்த்து ஜியோவின் புதிய ஏஐ அம்சங்களுக்கான ஆரம்ப அணுகலும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், ஜியோ நிறுவனமானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ பயனர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வழியாக ஜியோ ஏஐ கிளவுட் வெல்கம் ஆபருக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த மெசேஜில் - ஒரு மதிப்புமிக்க குடும்ப உறுப்பினர் மற்றும் ஜியோ கிளவுட் பயனராக, புதிய ஜியோ கிளவுட் சேவையை அனுபவிப்பதில் நீங்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் அந்த மெசேஜில் 100ஜிபி இலவச ஸ்டோரேஜ் (100GB free storage), ஏஐ மெமரீஸ் (, AI Memories), ஏஐ ஸ்கேனர் (AI Scanner), டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் புதிய ஏஐ அம்சங்களை முன்கூட்டிய அணுகல் (Early access to new AI features) ஆகியவைகளை அனுபவிக்கவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ பயனர்களுக்கான ஒரு இலவச சலுகை ஆகும். நீங்கள் ஒரு ஜியோ பயனராக இருந்தால், உங்களுக்கு இந்த மெசேஜ் வந்து இருந்தால் மட்டுமே இந்த சலுகை உங்களுக்கு கிடைக்கும். இதன் கீழ் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் பலவற்றை சேமிக்கலாம்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ரூ.601 மதிப்புள்ள ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பதும், ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை ட்ரூ 5ஜி அப்கிரேட் கிஃப்ட் வவுச்சர் என்கிறது என்பதும் கூட இங்கே குறிப்பிடத்தக்கது. ரூ.601 திட்டமானது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும்.
இது 4ஜி நெட்வொர்க்கில் உள்ள பயனர்களை 5ஜியை அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு திட்டமாகும். ஜியோ சேவையின் கீழ் தற்போது 2ஜிபி தினசரி டேட்டா அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவை வழங்கும் திட்டங்களுடன் மட்டுமே இலவச ஜியோ 5ஜி டேட்டா அணுக கிடைக்கிறது. 1.5ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்தவர்களுக்கு கிடைக்காது. ஆனால் ரூ.601 மதிப்புள்ள 5ஜி அப்கிரேட் வவுச்சர் மூலம் அது கிடைக்கும்.
ஜியோவின் ரூ.601 ஆனது மொத்தம் 12 தனிப்பட்ட டேட்டா வவுச்சர்களை உள்ளடக்கிய திட்டமாகும். அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு.. அடுத்த 1 ஆண்டுக்கு ஒவ்வொரு மாதமும், வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்கும் ரூ.51 மதிப்புள்ள டேட்டா வவுச்சர் கிடைக்கும். இப்படி மொத்தம் 12 மாதங்களுக்கு 12 டேட்டா வவுச்சர்கள் கிடைக்கும்.
இந்த வவுச்சர்களை ஒவ்வொரு மாதமும் மைஜியோ ஆப்பில் இருந்து ரிடீம் செய்து கொள்ள முடியும். தற்போது இந்த திட்டம் ஜியோவின் அதிகாரப்பூர்வ ஆப் ஆன மைஜியோ (MyJio) மற்றும் ஜியோ இணையதளம் வழியாக அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ரூ.601 டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் ஒரு ஆக்டிவ் பிளான் (ஒரு மெயின் ரீசார்ஜ்) இருக்க இருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications








