Jio விலை மீண்டும் ஏகுறப் போகிறதா? இந்த முறை Jio Star தான் காரணமா? ஆரம்ப விலையே இதானா? என்ன செய்ய போறீங்க?
ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஒரு கசப்பான செய்தி வெளியாகவுள்ளது. கடந்த ஜூலை மாதம் தான் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தது. இந்த விலை ஏற்றம் நடைபெற்று சில மாதங்களே ஆன நிலையில், மீண்டும் ஒரு விலை ஏற்றத்தை ஜியோ வாடிக்கையாளர்கள் (Jio customers) விரைவில் சந்திக்க நேரிடலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவலை பார்க்கலாம் வாங்க.
கடந்த வருடம் நடந்த பல விஷயங்களில், மக்களால் மறக்கவே முடியாத ஒரு நிகழ்வு என்றால், அது தொலைத்தொடர்பு துறையில் அறிவிக்கப்பட்ட திடீர் விலை ஏற்றம் தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக விலை ஏற்றத்தை அறிமுகம் செய்தன.

Jio விலை மீண்டும் ஏகுறப் போகிறதா? இந்த முறை Jio Star தான் காரணமா?
இந்த திடீர் விலை ஏற்றம் மக்களை அதிருப்திக்கு ஆளாக்கியது. இதன் காரணமாக, தனியார் டெலிகாம் பயனர்கள் பலர் பிரைவேட் டெலிகாம் நிறுவனங்களை புறக்கணித்து அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனத்திற்கு மாறத் துவங்கினர். இந்த திடீர் விலை ஏற்றத்தில் இருந்தே இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில், ஜியோ நிறுவனம் விரைவில் மற்றொரு விலை ஏற்றத்தை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தெரியாதவர்களுக்கு, ஜியோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஸ்னி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது. சர்வதேச அளவில் டிஸ்னி நிறுவனத்திற்கு நிதி சிக்கலை சமாளிக்க, ஜியோவுடன் டிஸ்னி நிறுவனம் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. இதற்கு பின், டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகிய சேவைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஜியோ ஸ்டார் (Jio Star) என்ற சேவை அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
Jio Star சேவைக்கு ஆரம்ப கட்டணம் எவ்வளவு?
இப்போது வரை இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக தான் அவர்களின் சேனல்களை இயக்கி வருகிறது. மிக விரைவில் இந்த இரண்டு சேனல்களும் சேர்ந்து இயங்க துவங்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக, ஜியோ ஸ்டார் சேவையின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய டிவி பேக் திட்டங்களை அறிவிக்கவுள்ளது. டிஸ்னி மற்றும் ஜியோ சினிமா ஆகிய இரண்டின் கீழ் மொத்தம் 134 சேனல்கள் இருக்கிறது.
இந்நிலையில், ஜியோ ஸ்டார் சேவைக்காக மொத்தம் 83 வெவ்வேறு விதமான டிவி சேனல் பேக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஜியோ ஸ்டார் சேவையின் ஆரம்ப விலை திட்டம் ரூ. 110 முதல் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 110 ரூபாய் செலவில் மக்கள் SD சேனைகள் உள்ளடக்கங்களை பார்வையிடலாம் என்று கூறப்படுகிறது. HD சேனல் பிக்குகளின் விலை விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
18% விலை உயர்வை ஜியோ வாடிக்கையாளர்கள் சந்திக்க நேரிடலாம்:
ஜியோ ஸ்டார் சேவை அறிமுகம் செய்யப்பட்டு, சேவை துவங்கப்பட்ட பிறகு, ஜியோ ரீசார்ஜ் திட்டங்களுடன் தற்போது கிடைக்கும் ஜியோ சினிமா சேவைக்கு பதிலாக ஜியோ ஸ்டார் சேவையை நிறுவனம் வழங்க துவங்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், ஜியோ பிராட்பேண்ட் சேவையுடன் ஜியோ ஸ்டார் சேவை கட்டாயம் அணுக கிடைக்கும் என்பதனால், ஜியோ கட்டணம் 18% உயர்வை காண வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி, ஜியோ ஸ்டார் சேவையுடன் மொபைல் ரீசார்ஜ் சேவை ஒருவேளை இணைக்கப்பட்டால், Jio Star நன்மையுடன் வரும் ஒரு சில ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பைட் திட்டங்களின் விலையில் கூட சிறிய அதிகரிப்பை நாம் காண வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








